(Source: ECI/ABP News/ABP Majha)
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை
பள்ளி மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை - விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு
விழுப்புரம் தாலுகா புதுக்குப்பம் பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் தங்கராசு மகன் பிரகாஷ் (வயது 39). இவர் அங்குள்ள ஒரு செங்கல் சூளையில் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அதே செங்கல் சூளையில் திண்டிவனத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் கூலித்தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்கு 12 வயதில் ஒரு மகள் உள்ளார். 6-ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, அந்த செங்கல் சூளையில் பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தாள்.
இந்நிலையில் கடந்த 26.10.2020 அன்று அந்த மாணவிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையறிந்த பிரகாஷ், அந்த மாணவியின் பெற்றோரிடம் சென்று நான் புதுச்சேரி மாநிலம் திருக்கனூரில் உள்ள மருத்துவமனைக்கு எனது மனைவியை அழைத்துச்செல்ல இருப்பதால் உங்கள் மகளையும் உடன் அழைத்துச்சென்று விட்டு வருவதாக கூறினார். இதை நம்பிய அவர்கள், தங்கள் மகளை பிரகாசுடன் அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் அந்த மாணவியை பிரகாஷ், உடல்நிலை சரியில்லை என்றுகூட பாராமல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி, அழுதுகொண்டே வந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், இதுகுறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, குற்றம் சாட்டப்பட்ட பிரகாசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும், மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட பிரகாஷ், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்