தற்காத்துக்கொள்வது எப்படி ?... விழுப்புரத்தில் பள்ளி மாணவர்களுக்கு டிஎஸ்பி சுரேஷ் விழிப்புணர்வு
மாணவர்கள் எவ்வாறு காவல்துறை சார்ந்த படிப்புகளை பயில்வது, வேலைவாய்ப்பு எப்படி பெறுவது என்றும் விளக்கப்பட்டது.
விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நடைபெற்றது. எம்ஆர்ஐசி ஆர்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வந்திருந்தனர். அப்போது, காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ், காவல் நிலையத்தில் உள்ள துப்பாக்கி, வாக்கி டாக்கி, கைதியை விசாரிக்கும் முறை, கணினி அறை, காவலர்கள் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முறை, பதிவேடு அறை, புகார் எழுதும் முறை, ஓய்வறை ஆகியவை மாணவர்களுக்கு காண்பித்து, விளக்கம் அளித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மாணவர்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களை எவ்வாறு தயார் செய்து கொள்வது, செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் தீமைகள் மற்றும் பெண் குழந்தைகள் பாலியல் ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்வது எப்படி என்பதை பற்றியும் கூறினார். மேலும் மாணவர்கள் எவ்வாறு காவல்துறை சார்ந்த படிப்புகளை பயில்வது, வேலைவாய்ப்பு எப்படி பெறுவது என்றும் விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் சமுதாயத்தில் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து, அவரிடம் தெரிவித்து, விளக்கங்களை தெரிந்து கொண்டனர். அப்போது, மாணவர்கள் தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்தும், அவரிடம் எடுத்துரைத்தனர். பின்னர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுரேஷ், மாணவி ஒருவரை ஆய்வாளர் இருக்கையில் அமர வைத்தார். அப்போது, அந்த மாணவி, நான் நன்றாகப் படித்து ஐபிஎஸ் அதிகாரியாக வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்