மேலும் அறிய

பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் யாரை அறிவிப்பதென்று திகைத்து நிற்கிறார்கள் - அமைச்சர் பொன்முடி

இடைத்தேர்தல் என்று அறிவித்த உடனே வேட்பாளரை அறிவித்தது திமுக தான் ஆனால் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் யாரை அறிவிப்பதென்று திகைத்து நிற்கிறார்கள் - அமைச்சர் பொன்முடி

விழுப்புரம் : இடைத்தேர்தல் என்று அறிவித்த உடனே வேட்பாளரை அறிவித்தது திமுக தான் ஆனால் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் யாரை அறிவிப்பதென்று திகைத்து நிற்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியிலுள்ள தனியார் அரிசி அரவை ஆலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, சக்கரபானி,சிவி கனேசன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, எம்.பி ஜெகத் ரட்சகன், காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன், துனை சபாநாயக பிச்சாண்டி உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய துனை சபாநாயகர் பிச்சாண்டி நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதி திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு காரணம் மகளிர் உரிமை தொகை என்பதால் மக்கள் வாக்களித்துள்ளதாகவும், எதிரணி இரண்டு பக்கம் பிரிந்து நிற்பதால் அவர்கள் தோற்க கூடிய கூட்டணி என தெரிவித்தார்.

அமைச்சர் சி.வி கணேசன் மேடை பேச்சு

படிக்கின்ற உயர்கல்வி பயிலும் மகளிருக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய், மகளிர் உரிமைதொகை ஆயிரம் என குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளதாகவும் நாப்பதும் நமதே நாடும் நமதே என கூறி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த முதல்வராக ஸ்டாலின் உள்ளாதாக அமைச்சர் சிவி கணேசன் மேடை பேச்சு பெருமிதம் தெரிவித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மேடையில் பேசுகையில் ...

திமுக கூட்டணி இடைத்தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் இளையபட்டாளம் ஒன்று கூடி நாளைய தமிழகத்தை உருவாக்கும் நிலையில் உள்ளதாகவும், சாதிய பின்புலம் கொண்டவர்களையும் சாதிய பின்புலத்தினால் மக்களை பிளவுபடுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டுமென தெரிவித்தார்.

அமைச்சர் சிவசங்கர் பேசுகையில்....

 நாடாளுமன்ற தேர்தலில் நாப்தற்கும் நாப்து வெற்றி பெறுவோம் என கூறி வெற்றி கண்டுள்ளார். ஸ்டாலின் அமைத்த அடித்தளம் தான் இந்தியா முழுவதும் எதிரொலித்துள்ளதாகவும் இந்தியாவில் ஸ்டாலின்  தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும் என கூறினார்.

மேடையில் பேசிய எம் பி ஜெகத்ரட்சகன்...

அரசியல் வரலாற்றில் நூற்றுக்கு நூறு வெற்றியை பெற்று தந்தவர் தான் ஸ்டாலின் என்றும்  டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் தங்களுக்கு பெருமையாக உள்ளதாகவும், நிறம் மாறாதா பூவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யவேண்டும் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அமைச்சர் பொன்முடி...

தேர்தல் என்று அறிவித்த உடனே வேட்பாளரை அறிவித்தது திமுக தான் ஆனால் பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காமல் யாரை அறிவிப்பதென்று திகைத்து நிற்பதாகவும், விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும்,  நண்பராக இருந்த ராதாமணியும் உயிருக்கு உயிராக இருந்த புகழேந்தி இன்று இல்லை என நினைவு கூர்ந்தார். இளைஞர்களை வழி நடத்த கூட உதயநிதி ஸ்டாலினின் தொண்டு தமிழகத்திற்கு செய்து கொண்டிருப்பார்கள் என்றும் பெண்களுக்கு மட்டும் அல்ல ஆண்களுக்கும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவி திட்டத்தினை முதல்வர் அறிவித்திருக்கிறார்கள் எந்த பிரச்சனைகள் இருந்தாலும் அன்னியூர் சிவாவை வெற்றி பெற செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மேடை பேச்சு

கொள்கை கூட்டணி கொண்டது இந்தியா கூட்டணி என்றும் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி தமிழக முதல்வர் செயல்பட்டு வருவதாகவும், 40 தொகுதிகளிலும் வெற்றி என்பதும் இந்தியாவிற்கு வழிகாட்டுகிற வெற்றியாக  உள்ளது. தமிழகத்தில் திமுகவிற்கு தான் வாக்கு என மக்கள் திரும்பி உள்ளதாகவும், கடந்த மூன்றாண்டுகளில் நிதி மேலாண்மையை கடைபிடித்து வெற்றி கண்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget