(Source: ECI/ABP News/ABP Majha)
சுற்றுலா வந்த மாணவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும் முதல்வர் - வைரல் வீடியோ
சுற்றுலா வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சாக்லெட் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த மாணவர்களுக்கு முதலமைச்சர் ரங்கசாமி சாக்லெட் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புதுவை முதலமைச்சர் ரங்கசாமி ஓய்வு நேரத்தில் தனது நண்பர் நேரு வீதியில் வைத்துள்ள வாட்ச் கடையில் அமர்ந்து இருப்பது வழக்கம். அப்போது அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அவரை சந்தித்து பேசுவார்கள். இதேபோல் நேற்று மதியமும் வாட்ச் கடையில் அமர்ந்திருந்தார். அப்போது புதுவைக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்த மாணவ, மாணவிகள் நேரு வீதியில் வந்தனர்.
புதுச்சேரி: சுற்றுலா வந்த மாணவர்களுக்கு சாக்லெட் கொடுக்கும் முதல்வர் ரங்கசாமி... @abpnadu pic.twitter.com/yOyaKJgnVG
— SivaRanjith (@Sivaranjithsiva) October 9, 2022
அவர்கள் முதலமைச்சர் கடையில் இருப்பதை அறிந்து அவரை சந்தித்து புகைப்படம் எடுக்க விரும்பினார்கள். மாணவர்களின் ஆசையை அறிந்த முதலமைச்சர் ரங்கசாமி அழைத்து சாப்பிட்டீர்களா? என்று பரிவுடன் விசாரித்தார். மேலும் புதுவை உங்களுக்கு பிடித்துள்ளதா? என்றும் கேட்டார். நன்கு படித்து வரும் காலத்தில் பெரிய ஆளாக வேண்டும் என்றும் அறிவுரை கூறினார். தொடர்ந்து அவர்களுக்கு சாக்லெட்டும் வழங்கி அவர்களுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக முதல்வர் ரங்கசாமி குழந்தைகளை பார்த்தால் அவர்களை அழைத்து அன்பாக பேசுவர், மேலும் அவர்களை எப்போதும் "படித்தால் நல்ல நிலைமைக்கு வரலாம் , படிப்புதான் முக்கியம்" என்கிற ஒரு வார்த்தையை எப்போதும் கூறுவார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்