மேலும் அறிய

Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ராவில் முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்

Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

Key Events
Assembly Election Results 2024 LIVE Updates Maharashtra Jharkhand Election Wayanad By Election Result Vote Counting Latest News Assembly Election Results 2024 LIVE: மகாராஷ்ட்ராவில் முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்
மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் சட்டசபைத் தேர்தல்
Source : twitter

Background

Assembly Election Results 2024 LIVE Updates: மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலில், பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளின் INDI கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது.

சட்டமன்ற தேர்தல் முடிவுகள்:

மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று காலை 8 மணியளவில் தொடங்குகிறது.  மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான மஹா விகாஸ் அகாதி (எம்விஏ) கூட்டணிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரம்,  ஜார்கண்ட்ர் மாநிலத்திலும் கடும் இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்:

மகாயுதி கூட்டணியில் பாஜக 149 இடங்களிலும், சிவசேனா 81 இடங்களிலும், அஜித் பவார் தலைமையிலான என்சிபி 59 இடங்களிலும் போட்டியிட்டன. இதற்கிடையில், எம்விஏ கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களிலும், சிவசேனா (யுபிடி) 95 இடங்களிலும், என்சிபி (சரத்சந்திர பவார்) 101 இடங்களிலும் போட்டியிட்டன. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் 3,239 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த முறை 4,136 நபர்கள் போட்டியிட்டனர். அவர்களில் 2,086 பேர் சுயேட்சைகளாக களமிறங்கியுள்ளனர். மஹாயுதி மற்றும் MVA இரண்டின் கிளர்ச்சி வேட்பாளர்களும் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தங்கள் கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர்.  288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மைக்கு 145 எம்.எல்.ஏக்கள் அவசியம். பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மகாயுதி கூட்டணிக்கு வெற்றியை கணிக்கின்றன, இருப்பினும் சில கணிப்புகள் தொங்கு சட்டசபை அல்லது MVA வெற்றிக்கான சாத்தியக்கூறுகளை தெரிவிக்கின்றன.

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்:

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) அல்லது ஜேஎம்எம் தலைமையிலான இந்தியா கூட்டணி அடுத்த ஆட்சியை அமைக்குமா என்பதை இன்றைய நாள் முடிவில் நாடு அறியும். நவம்பர் 23ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்கும் வாக்கு எண்ணும் பணி, தபால் வாக்குகளுடன் தொடங்கும். ஆரம்ப நிலைகள் காலை 9 மணிக்கு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன, இது 2000 ஆம் ஆண்டில் ஜார்கண்ட் உருவானதிலிருந்து அதிகபட்ச வாக்குசதவிகிதமாகும்.

இங்கு நவம்பர் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஒவ்வொரு கட்டமாக முறையே 43 மற்றும் 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு செய்யப்பட்டது.  இந்தத் தேர்தலில் 28 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கு (எஸ்டி) ஒதுக்கப்பட்ட இடங்களும், ஒன்பது பட்டியல் சாதியினருக்கு (எஸ்சி) ஒதுக்கப்பட்ட இடங்களும் அடங்கும். 2019 தேர்தலில், ஜேஎம்எம் 19 எஸ்டி தொகுதிகளையும், காங்கிரஸ் 6, பாஜக 2, மற்றும் JVM(P) 1 இடங்களையும் பெற்றன. எஸ்சி தொகுதிககளில், BJP 6, JMM 2, மற்றும் RJD 1 ஆகியவற்றை வென்றன.

இம்முறை, NDA 68 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியது, கூட்டணிக் கட்சிகளான AJSU கட்சி 10, JD(U) 2, மற்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 1 ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது. இந்திய கூட்டணியில் JMM 43 இடங்களிலும், காங்கிரஸ் 30, RJD 6, மற்றும் சிபிஐ(எம்எல்) 4 இடங்களில் போட்டியிடுகின்றன. 2019 சட்டமன்றத் தேர்தலில், ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி 47 இடங்களைப் பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. அதே நேரத்தில் பாஜகவின் எண்ணிக்கை 2014 இல் 37 இல் இருந்து கடந்த முறை 25 ஆக குறைந்தது.

இந்தத் தேர்தல்களின் முடிவுகள் மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் அரசியல் நிலப்பரப்பை தீர்மானிக்கும், அரசியல் கூட்டணிகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

13:37 PM (IST)  •  23 Nov 2024

மகாராஷ்ட்ராவில் முதலமைச்சரை தேர்வு செய்ய பா.ஜ.க. தீவிரம்

மகாராஷ்ட்ராவில்  பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதால் முதலமைச்சர் பதவியை கைப்பற்ற கூட்டணி கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. 

12:49 PM (IST)  •  23 Nov 2024

வயநாடு இடைத்தேர்தல்; 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று பிரியங்கா காந்தி முன்னிலை

வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று பிரியங்கா காந்தி முன்னிலையில் உள்ளார். 

Load More
New Update
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Delhi Car Blast | செங்கோட்டை அருகேவெடித்து சிதறிய கார்பதற்றத்தில் டெல்லி!பரபரப்பு காட்சிகள்
Christmas Cake Making | வந்தாச்சு கிறிஸ்துமஸ்!தனியார் சொகுசு ஹோட்டலில் தயாராகும் 200 கிலோ CAKE
90 KM சைக்கிளிங், 21 KM ரன்னிங்! அசர வைத்த அண்ணாமலை! பூரித்து பாராட்டிய மோடி
சறுக்கிய விஜய் கிராஃப்? தள்ளாடும் தளபதி கச்சேரி! VIEWS குறைந்தது ஏன்?
நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையில் புதிய மைல்கல்!அசத்திய அப்போலோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
டெல்லி குண்டுவெடிப்பில் 10 பேர் பலி; மோடி இரங்கல்; உடனடியாக ஸ்பாட்டுக்கு போன அமித் ஷா
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
Operation Sindoor 2.0: டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம்! ”இந்த முறை விடக்கூடாது” டிரெண்டாகும் ஆப்ரேஷன் சிந்தூர் 2.0..
Delhi Car Blast: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் 8 பேர் பலி; நாடு முழுவதிலும் உஷார் நிலை
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலி! சென்னையில் உச்சக்கட்ட வாகன சோதனை.. முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு
Special Feature:
Special Feature: "திறமைக்கும் பாரம்பரியத்திற்கும் தலைவணங்கும் ஐஸ்வர்யா ரே சர்கார்"
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
SIR: சிறப்பு தீவிர திருத்தம்; வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா? A- Z சந்தேகங்கள், பதில்கள்.. ஒரு வழிகாட்டி!
Affordable Automatic Cars: Maruti முதல் Hyundai வரை; ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் டாப் ஆட்டோமேடிக் கார்கள் லிஸ்ட்
Maruti முதல் Hyundai வரை; ரூ.10 லட்சம் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ் தரும் டாப் ஆட்டோமேடிக் கார்கள் லிஸ்ட்
Edappadi Palanisamy: காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
காவலர் குடியிருப்பில் படுகொலையான இளைஞர் - கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிசாமி பதிவு
Embed widget