மேலும் அறிய

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ரயில்கள் ரத்து, நேரம் மாற்றம் - முழு விவரம் இதோ

திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள்

திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்து சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்படும் தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045) வருகிற 1-ந்தேதி முண்டியம்பாக்கம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும்.

அதுபோல் விழுப்புரத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம் - சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046) 1-ந்தேதியன்று விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்படும்.

மேலும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து 1-ந் தேதி மதியம் 2.35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019) 30 நிமிடங்கள் தாமதமாக மாலை 3.05 மணிக்கு புறப்படும். அதுபோல் விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.25 மணிக்கு புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்படும். புதுச்சேரி- விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) வருகிற 1, 3, 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து காலை 7.45 மணிக்கு புறப்படும் எழும்பூர்- திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 22675) 2, 3, 4 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 15 நிமிடங்களும், சென்னை எழும்பூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் எழும்பூர்- புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66051), குருவாயூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்படும் குருவாயூர்- சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 16128) 1-ந்தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 30 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
Puducherry Power Cut: புதுச்சேரியில் நாளை (05-08-2026) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்படும்?
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
1,200 வருஷத்து பழமை! திண்டிவனம் ஏரியில் கிடைத்த பல்லவர் காலத்து சிலை... ஆய்வில் வெளிவந்த ஆச்சரியத் தகவல்கள்!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
பயிர் இழப்பைத் தடுக்க சூப்பர் வழிமுறைகள்! விழுப்புரத்தில் அட்மா திட்ட விவசாயிகள் - விஞ்ஞானிகள் சந்திப்பு!
போதையில் வீழ்வது தனிமனித இழப்பல்ல... தேசத்தின் வீழ்ச்சி! ஆரோவில்லில் ஒலித்த மோடியின் குரல்!
போதையில் வீழ்வது தனிமனித இழப்பல்ல... தேசத்தின் வீழ்ச்சி! ஆரோவில்லில் ஒலித்த மோடியின் குரல்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
ஆளுநருக்கு பவர் கட்..! அதிகாரத்தை கையிலெடுத்த CM விஜய் - அனுமதி கட்டாயம், கலக்கத்தில் அதிகாரிகள்
Udhayanidhi: போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
போலீஸ் விசாரணை முடிந்ததும், முதலமைச்சரை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி - வீடியோ வைரல்
TN Weather News: சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் விடிய விடிய மழை..! 9 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை - தமிழக வானிலை அறிக்கை
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Embed widget