மேலும் அறிய

Sasikala: அதிமுக ஒரு ஆலமரம்; சில பறவைகள் சுயநலமாக இருக்கும்; சில நன்றியோடு இருக்கும் - சசிகலா சரவெடி பேச்சு

மிக பெரிய ஆலமரம், அதில் சில பறவைகள் சுயநலமாக இருக்கும், சில பறவைகள் ஆலமரதிற்க்கும் உடன் இருக்கும் பறவைகளுக்கும் நன்றியுடன் இருக்கும்.. அப்படி தான் அதிமுகவில் இன்னும் உண்மையான தொண்டர்களும் இருக்கிறார்கள்..

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அதிமுகவின் சிவி சண்முகம் தீவிர விசுவாசியாக இருந்த முகமது ஷெரீப் தற்பொழுது சசிகலா ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இன்று அவரது மகள் திருமண விழா சசிகலா முன்னிலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர் சசிகலா

பின்னர் மேடையில் சசிகலா பேசும்போது, “ஒரு மிகப்பெரிய ஆலமரம். இதில் எத்தனையோ கோடிக்கணக்கான பறவைகள் தஞ்சமடைந்து வந்துள்ளன. ஒரு சில பறவைகள் தன் வயிறு நிறைந்தால் போதும் என்று சுயநலத்துடன் இருக்கும். அவைகளால் கூட இருக்கும் மற்ற பறவைகளுக்கும் மரத்திற்கும் எந்தவிதமான பயனும் ஏற்படாது. அதே சமயத்தில் வேறு சில பறவைகள் இருக்கும் இடமே தெரியாது. ஆனால், தன்னோடு இருக்கும் மற்ற பறவைகளை காப்பாற்றுவது மட்டுமல்லாமல் ஆலமரத்தில் அடைந்த பலன்களை நன்றியோடு நினைத்து மரத்திற்கும் பாதுகாப்பாக விளங்கும்.

Sasikala: அதிமுக ஒரு ஆலமரம்; சில பறவைகள் சுயநலமாக இருக்கும்; சில நன்றியோடு இருக்கும் - சசிகலா சரவெடி பேச்சு

அதுபோன்ற ஆலமரமாக விளங்கும் இந்த இயக்கம் அழிந்துவிடாமல் துணை நிற்கும் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களை காப்பாற்றுவதற்கு என் எஞ்சியுள்ள வாழ்நாளை முழுவதுமாக அர்ப்பணிக்கிறேன். அம்மா என்று நாடகமாடிய ஒரு சில பொய் முகங்களுக்கு மத்தியில் உங்களை போன்ற உண்மையான தொண்டர்களுக்கு நம் இயக்கத்தில் சிறப்பான எதிர்காலம் உண்டு என்பதையும் இந்த நேரத்தில் உறுதியோடும் தெரிவித்துக் கொள்கிறேன். புரட்சித் தலைவர் எந்தவிதமான சாதி, மத பேதமின்றி அனைவரின் பேராதரவோடு இந்த இயக்கத்தை உருவாக்கினார். ஜெயலலிதாவும் அதே வழியைதான் பின்பற்றினார். தற்போது நானும் இதே வழியைதான் தொடர்ந்து பயணித்து கொண்டிருக்கிறேன்.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் உண்மையான மக்கள் இயக்கம். இது தொண்டர்களால் உருவான ஒரு பேரியக்கம். கழக தொண்டர்களுக்கும் தமிழக மக்களின் நலனுக்கும் தொடங்கப்பட்டது. இது எத்தனையோ துரோகங்களையும், சூழ்ச்சிகளையும் வேரறுத்த இயக்கம். ஆகையால் எந்தவிதமான துரோகங்களாலும், சூழ்ச்சிகளாலும் இந்த இயக்கதை யாராலும் அடக்கிவிட முடியாது. அதேபோல் இயக்கத்தை தனிப்பட்ட முறையில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தொண்டர்கள்தான் இயக்கத்தின் உண்மையான சொந்தக்காரர்கள். எனவே எந்தவிதமான வேறுபாடின்றி தொண்டர்களை அரவணைத்து சென்றால்தான் இந்த இயக்கம் மீண்டும் புதுப்பொழிவுபெறும். இந்த உன்னத பணியை நாம் நிறைவேற்றிக் காட்டுவோம்.

Sasikala: அதிமுக ஒரு ஆலமரம்; சில பறவைகள் சுயநலமாக இருக்கும்; சில நன்றியோடு இருக்கும் - சசிகலா சரவெடி பேச்சு

செய்தியாளர் சந்திப்பில் சசிகலா கூறியதாவது :- 

தமிழகம் முழுவதும் ரவுடிகள் சாலையோரம் உள்ள கடைகளில் கட்டாயம் பணம் வசூல் செய்து வருகிறார்கள். ஊழல் குற்றச்சாட்டு உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தனர். ஆனால் தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் திமுக அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வருகிறது.

திமுகவினர் திராவிட மாடல் என கூறி வருகின்றனர். ஆனால் தற்பொழுது வரை எனக்கு திராவிட மாடல் என்றால் எனக்கு ஒன்றும் புரிய வில்லை எனவும், மேலும் 400க்கும் மேற்பட்ட திட்டங்களை திமுகவினர் செயல்படுவதாக கூறி வருகின்றனர். ஆனால் இவையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றபின் திமுகவினர் அராஜகங்கள் அதிகரித்து வருகின்றன.

அதிமுகவின் பொதுச்செயலாளராக இன்று ஒன்றை மட்டும் சொல்கிறேன். கட்சிக்கொடியை பயன்படுத்தக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்பவர்கள் திமுகவை சேர்ந்தவர்களாகவோ அல்லது திமுகவினருக்கு மறைமுகமாக உதவி செய்பவர்களாக இருக்கக்கூடியவர்களாக இருக்கக்கூடும். அதிமுக ரத்தம் உடம்பில் ஓடினால் கட்சியை காப்பது பற்றி சிந்திக்க வேண்டுமே தவிர இருப்பவர்களை விரட்டியடித்து கட்சியை பலவீனப்படுத்த மாட்டார்கள். இதுபோன்ற ஒருசிலரை பார்க்கையில், கட்சிக்கு எதிரான திட்டங்களை மனிதில் வைத்து செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர்களின் எண்ணம் என்றைக்கும் ஈடேறாது என்பதை இந்த கட்சியில் 38 ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு தமிழச்சியாக உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர். மறைந்தபோது ஏற்பட்ட அதே சோதனைகள் தான் மீண்டும் ஏற்பட்டு இருக்கிறது. அன்று இரண்டே பெண்கள் கருணாநிதியின் சூழ்ச்சிகளை முறியடித்து நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவாக்கிக் காட்டினோம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை புறம்தள்ளிவிட்டு உங்கள் நேரத்தை கட்சி வளர்ச்சிக்காக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இனி வரும் காலம் நம்முடையதே. நாளை நமதே" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Embed widget