கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்காததால் தான் பட்டியலின மக்கள் செல்லமுடியாமல் பிரச்னை வருகிறது - எம்பி ரவிக்குமார்
கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்காததால் தான் பட்டியலின மக்கள் செல்லமுடியாமல் பிரச்சனை வருகிறது - எம் பி ரவிக்குமார்
![கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்காததால் தான் பட்டியலின மக்கள் செல்லமுடியாமல் பிரச்னை வருகிறது - எம்பி ரவிக்குமார் The problem comes from not setting up trustee committees in temples MP Ravikumar TNN கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்காததால் தான் பட்டியலின மக்கள் செல்லமுடியாமல் பிரச்னை வருகிறது - எம்பி ரவிக்குமார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/08/3a3deda7788d1bd781bb9f6dada29f1f1686211927292194_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: இந்து சமயநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைக்காததால் தான், பட்டியலின மக்கள் உள்ளே அனுமதிக்காதது தான் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் என எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்பு குழு கூட்டம் எம்பி ரவிக்குமார், திமுக எம்எல்ஏ புகழேந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன் கேட்டறிந்தனர். அதனை தொடர்ந்து பேட்டியளித்த எம்பி ரவிக்குமார், “கோலியனூர் அருகேயுள்ள மேல்பாதி கிராமத்திலுள்ள தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் உள்ளே அனுமதிக்காத நிலையில், கோவிலில் சீல் வைக்கப்பட்டுள்ளது. கோவில் விவாகரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் 4 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாகவும் 1972 ஆம் ஆண்டு முதல் அப்பகுதியை சார்ந்தவரின் பெயரில் கோவில் உள்ளதாக தெரிவிக்கிறார்கள். இது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் 1068 கோவில்கள் இந்து சமயநிலையத்துறையின் கீழ் உள்ளது. இந்த கோவில்களில் அறங்காவலர் குழுக்களை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரும்பாலான பட்டியலின மக்கள் உள்ளே அனுமதிக்காத பிரச்சனைக்கு அறங்காவலர் குழுக்கள் அமைக்காதது தான் காரணம். இதில் ஜனநாயக படுத்துவதற்கான நடவடிக்கையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் ரவி தமிழக முதலமைச்சர் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதை விமர்சனம் செய்ததை, நான் முதல்வரை விமர்சனம் செய்ததாக கருதவில்லை. அது பிரதமரை விமர்சனம் செய்ததாக கருதுகிறேன். பிரதமர் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவரையும் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. ஆளுநர் பிரதமரை விமர்சனம் செய்ததாகவே கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)