மேலும் அறிய
Advertisement
கடலூரில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறப்பு - மேள தாளம் முழங்க வரவேற்பு
’’கடலூர் மாவட்டத்தில் கன மழையால் தொடங்கப்படாமல் இருந்த 1 ஆம் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறக்கப்பட்டது’’
*கடலூரில் 17 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்த 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்கள், இனிப்புகள் மற்றும் பூக்கள் வழங்கி வரவேற்ற சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஆட்சியர்*
தமிழகத்தில் 17 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் கடந்த 1 ஆம் தேதி திறக்கப்பட்டது. இதையொட்டி, தொடக்கக் கல்வி இயக்குநரகம் பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது. மேலும், 50 விழுக்காடு மாணவர்களுடன் பள்ளிகள் நடைபெறும் என்றும், சுழற்சி முறையில் ஒருநாள் விட்டு ஒருநாள் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதனால் முதல் நாள் வரக்கூடிய மாணவர்கள் அடுத்த நாள் பள்ளிக்கு வரத் தேவையில்லை. முழுநாளும் வகுப்பு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் கன மழையால் தொடங்கப்படாமல் இருந்த 1 ஆம் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பள்ளி திறக்கப்பட்டது மாணவ மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.
தமிழகத்தில் கடந்த ஒன்றாம் தேதி 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்புக்கான மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு நடந்து வந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கனமழையால் பள்ளிகள் தொடங்கப்படவில்லை இந்நிலையில் 15 நாட்களுக்குப் பிறகு மழை விட்டு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டது ஒன்றிலிருந்து எட்டாம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு உற்சாகத்துடன் வந்தனர். கடலூர் புதுபாளையம் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளுக்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் இனிப்புகள் மற்றும் பூக்கள் வழங்கி பள்ளி மாணவர்களுக்கு வரவேற்பு அளித்தனர். பின்னர் பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யபட்டு உள்ளனவா என தலைமை ஆசிரியரிடம் கேட்டு அறிந்தனர். இதே போல் கடலூரில் அமைந்து உள்ள நகராட்சி பள்ளியில், மாணவர்களுக்கு இசை தாளம் முழங்க பள்ளி மாவண மாணவிகளை ஆசிரியர்கள் வரவேற்றனர்.
மாணவர்களை வரவேர்த்த பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்புரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 2,129 பள்ளிகள் உள்ள நிலையில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் நடைபெற்று வருகிறது பள்ளி மாணவ மாணவிகள் பாதுகாப்பு கருதி கொண்டு ஒரு வகுப்பறையில் 20 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன கடலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் பள்ளிகள் 15 நாட்கள் திறக்கப்படாமல் இருந்த அகற்றப்பட்டு கட்டிடத்தையும் உறுதி செய்யப்பட்டு தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு இருக்கிறது மாணவர்கள் உற்சாகத்தோடு பள்ளிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் ஒரு சில மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை அவர்களும் இரண்டு மூன்று நாட்களில் வந்துவிடுவார்கள் என மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
ஜோதிடம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion