மேலும் அறிய

மீண்டும் திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் நீர் - காரணம் என்ன தெரியுமா ?

மீண்டும் திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் பகுதியால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள்.

புதுச்சேரி கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம். சென்னை மெரினா  கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுச்சேரி கடற்கரையைதான். இந்த நிலையில் 17ம் தேதி காலை வழக்கம்போல் புதுச்சேரி கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர். அப்போது திடீரென பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் நிறம் மாறியிருந்தது.

மீண்டும் திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் நீர் - காரணம் என்ன தெரியுமா ?

பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும் போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சி அளித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர். இது தொடர்பாக மீனவர்கள் ஆரோவில் பகுதியில் அதிக மழை பொழிவு காரணமாக அங்குள்ள செம்மண் சரிந்து நீர் கடலில் கலந்து கடலில் கலந்திருக்கும் என்றும், மீண்டும் இது நீள நிறமாக மாறும் என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக கடல் நிறம் மாறியதற்கான காரணம் என்ன என்று  தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தாரும் விரைந்து வந்து கடல்நீரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.

மீண்டும் திடீரென நிறம் மாறிய புதுச்சேரி கடல் நீர் - காரணம் என்ன தெரியுமா ?

புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும அதிகாரிகளின் ஆய்வில் கடல் நீரில் வேதிப்பொருட்கள் கலக்கவில்லை என்பது தெரியவந்தது. கடல் நீரில் அமிலம், ஆக்சிஜன் அளவு குறையாமல் இருந்தது. ஆனால் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வறிக்கை இன்னும் வரவில்லை. இதனிடையே இன்றும் தலைமை செயலகம் முதல் காந்தி சிலை வரையிலான பகுதியில் மீண்டும் லேசாக செந்நிறமாக கடல் நீர் காட்சியளித்தது. இதற்கான காரணம் தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு முடிவுக்கு பின்னரே தெரியவரும் என்றும் மாசுக்கட்டுப்பாட்டு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.

Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

  •  மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதைக்கு கோயில்.. காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் கமல்நாத் உறுதி..!

மத்தியப் பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்தால் இலங்கையில் சீதாவுக்கு கோயில் கட்டுவோம் என காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.  நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என தகவல்கள் கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலங்கானா, மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தான் தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க..

  • தன்னலமற்ற அறிவுஜீவிகள்.. கம்யூனிஸ்டுகளுக்கு பாராட்டா? ஷாக் கொடுத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர்..

பாஜகவின் தாய் அமைப்பாக கருதப்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு, கடந்த 1925ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று தொடங்கப்பட்டது. எனவே, ஆண்டுதோறும் அமைப்பு தொடங்கப்பட்ட விஜயதசமி நாளன்று பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்கள், சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்படுவார்கள். மேலும் படிக்க..

  • நிலத்தை பாதுகாக்கவே ஆயுதங்களை வழிப்படுகிறோம் – பிரதமர் மோடி பேச்சு..

இந்துக்களின் புனித பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. இந்தியாவில் நவராத்திரி பண்டிகை  இந்தாண்டு அக்டோபர் 7 ஆம் தேதி தொடங்கி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி அதாவது விஜயதசமியுடன் இன்று நிறைவடைகிறது. இந்த விழாக் கொண்டாடுவதற்கு பல்வேறு புராணக்கதைகள் கூறப்படுகிறது.  மேலும் படிக்க..

  • I.N.D.I.A கூட்டணிக்கு ஆர்.எஸ்.எஸ் ஆதரவா? உத்தவ் தாக்கரே சிவசேனா போட்ட ஸ்கெட்ச்..

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக, தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க முனைப்பு காட்டி வருகிறது. கடந்த இரண்டு மக்களவை தேர்தல்களிலும் 280க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இந்த சூழலில், வரவிருக்கும் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து ஆட்சியை கைப்பற்ற INDIA கூட்டணி பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் படிக்க..

  • ’ போர்ல இறக்கம் எல்லாம் பார்க்கக்கூடாது’ – இஸ்ரேலுக்கு தோளோடு தோள் கொடுத்த பிரான்ஸ் அதிபர்..

அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடுத்து வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 7ஆம் தேதி, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே மோதல் தொடங்கியது.  மேலும் படிக்க..

  • ஆர்.எஸ்.எஸ்ஸை புகழ்ந்து தள்ளிய சங்கர் மகாதேவன்.. அகண்ட பாரதம் குறித்து அசால்ட் பேச்சு..

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மலையாளம், தமிழ் தொடங்கி பரவலாக இந்திய மொழிகளில் பாடி பிரபல பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் சங்கர் மகாதேவன். தேசிய விருதுகள், கேரள மாநில விருது, பத்மஸ்ரீ  விருது என பல்வேறு விருதுகளைக் குவித்து தன் கம்பீரக் குரலுக்கு பல மொழி ரசிகர்களையும் பெற்றுள்ளார். குறிப்பாக தமிழில் நடிகர் விஜய்க்கு ‘மச்சான் பேரு மதுர’, ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ உள்ளிட்ட பாடல்கள், அஜித், சூர்யாவுக்கு ஓப்பனிங் பாடல்கள் எனப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். மேலும் படிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget