மேலும் அறிய

Shankar Mahadevan: ஆர்எஸ்எஸ்ஸை புகழ்ந்து தள்ளிய சங்கர் மகாதேவன்.. அகண்ட பாரதம் குறித்து அசால்ட் பேச்சு!

"அகண்ட பாரதம் என்ற நமது சித்தாந்தம், நமது மரபுகள், நமது கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்களிப்பு எவரையும் விட அதிகம்" - சங்கர் மகாதேவன்

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலையாளம், தமிழ் தொடங்கி பரவலாக இந்திய மொழிகளில் பாடி பிரபல பாடகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் சங்கர் மகாதேவன். தேசிய விருதுகள், கேரள மாநில விருது, பத்மஸ்ரீ  விருது என பல்வேறு விருதுகளைக் குவித்து தன் கம்பீரக் குரலுக்கு பல மொழி ரசிகர்களையும் பெற்றுள்ளார்.

குறிப்பாக தமிழில் நடிகர் விஜய்க்கு ‘மச்சான் பேரு மதுர’, ‘நான் அடிச்சா தாங்க மாட்ட’ உள்ளிட்ட பாடல்கள், அஜித், சூர்யாவுக்கு ஓப்பனிங் பாடல்கள் எனப் பாடி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். இவர் இன்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். 

ரேஷிம்பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் விஜயதசமி உத்சவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சங்கர் மகாதேவன் பேசியதாவது: “நான் என்ன சொல்ல முடியும்? நான் உங்களுக்கு தலைவணங்க மட்டுமே செய்ய முடியும். 'அகண்ட பாரதம்' என்ற நமது சித்தாந்தம், நமது மரபுகள், நமது கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ்ஸின் பங்களிப்பு எவரையும் விட அதிகம்.

நான் ஒவ்வொரு மனிதனின் அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். இதுதான் நமது நாடு" என்று பேசினார். மேலும், மும்பையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்துடனான தனது சந்திப்பைப் பற்றி விவரித்த சங்கர் மகாதேவன், “அது ஒரு நிறைவான அனுபவம். இந்த தனிப்பட்ட அன்பான அழைப்புக்கு நன்றி. இன்று நான் ஒரு இந்தியக் குடிமகன் என்பதில் பெருமை கொள்கிறேன்" என்று சங்கர் மகாதேவன் பேசினார்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கென ஒரு தேசிய கீதத்தை சங்கர் மகாதேவன் இசையமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைப் பற்றி சங்கர் மகாதேவனின் இந்தப் பேச்சு சினிமா, அரசியல் வட்டாரங்களில் கவனமீர்த்துள்ளது.

தலைப்பு செய்திகள்

Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Indian Billionaires: ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
ஆண்டுக்கு ரூ.100 கோடி சம்பாதிக்கும் 570 இந்தியர்கள்..! 5 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி - அரசு தகவல்
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
Tatkal Ticket Rule Change: தட்கல் டிக்கெட் எடுக்கப் போறீங்களா?.. ஆகஸ்ட் 1 முதல் புது ரூல்ஸ்.. முழு விபரம் இதோ!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!
இதை பார்த்தா அப்புறம் இந்த உணவ சாப்பிட மாட்டீங்க! அருவருப்பின் உச்சம்! வைரல் வீடியோவால் அதிர்ச்சி!

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.! ரூ.5,099 கட்டணத்தில் கண்காணிப்பு கருவி- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Embed widget