மேலும் அறிய
தரைப்பாலம் கட்டும்போது எம்ஜிஆர் சிலை சேதம் - மூன்று அணி ஒன்றாகி குரல் கொடுத்த தொண்டர்கள்
ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் வந்த பத்துக்கு மேற்பட்டோர் புதியதாக மீண்டும் எம்ஜிஆர் சிலையை அமைத்து தர வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர்.
![தரைப்பாலம் கட்டும்போது எம்ஜிஆர் சிலை சேதம் - மூன்று அணி ஒன்றாகி குரல் கொடுத்த தொண்டர்கள் MGR statue damaged during footbridge construction near Cuddalore தரைப்பாலம் கட்டும்போது எம்ஜிஆர் சிலை சேதம் - மூன்று அணி ஒன்றாகி குரல் கொடுத்த தொண்டர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/05/efe39dde0caf2a35b268c709bdc509051672900775416572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சேதமடைந்த எம்ஜிஆர் சிலை
விருத்தாசலம் நெடுஞ்சாலை துறை சார்பில் தரைப்பாலம் கட்டும் பணியின் போது அருகே உள்ள எம்ஜிஆர் சிலை சிமெண்ட் கட்டை சரிந்து கீழே விழுந்தது, அதிமுக தொண்டர்கள் நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கை கண்டித்து விருத்தாசலம் பாலக்கொள்ளை சாலையில் சாலை மறியல் செய்தனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக் கொள்ளை சாலை நான்கு முனை சந்திப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாலம் அருகே கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலை அங்கு உள்ளது. பாலம் கட்டும் பணியின் போது அருகே உள்ள எம்ஜிஆர் சிலை திடீரென சிமெண்ட் கட்டை பெயர்ந்து சிலை சரிந்து விழுந்தது.
எம்ஜிஆர் சிலை சேதம் அடைந்த தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக தொண்டர்கள் நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கால் தான் எம்ஜிஆர் சிலை கீழே விழுந்ததாகவும், அதனை சீரமைத்து தரக்கோரி விருத்தாசலம் பாலக் கொள்ளை சாலையில் கண்டியான் குப்பம் பகுதியில் திடீரென சாலை மறியல் செய்தனர்.
அப்பொழுது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் இரண்டாவது வார்டு வட்ட செயலாளர் அன்பழகன் கீழே படுத்து புரண்டு விழுந்து கதறி அழுதார், உடனே அங்கு வந்த ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் வந்த பத்துக்கு மேற்பட்டோர் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்தும், புதியதாக மீண்டும் எம்ஜிஆர் சிலையை அமைத்து தர வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பினர். தகவல் அறிந்த வந்த விருத்தாசலம் காவல்துறையினர் அதிமுக தொண்டர்களை சமாதானம் செய்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion