(Source: ECI/ABP News/ABP Majha)
விழுப்புரம் அருகே கும்பகோணம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட மேல்பாதி மக்கள்
விழுப்புரம் அருகே கும்பகோணம் சாலையில் மேல்பாதி மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஒருமணி நேரம் போக்குவரத்து பதிப்பு.
விழுப்புரம் அருகே உணவகத்தில் உணவருந்திக்கொண்டிருந்த முதியவர் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரனைக்காக மூன்று பேர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் அடுத்த கோலியனூர் கூட்டு சாலையில் உள்ள உணவகம் ஒன்றில் மேல்பாதி கிராமத்தை சேர்ந்த பட்டியலின வகுப்பை சேர்ந்த கலியமூர்த்தி என்பவர் உணவருந்திக்கொண்டிருந்த போது அங்கு மது போதையில் வந்த இளைஞர் சிலர் கலியமூர்த்தி முதுகில் குத்தியுள்ளனர். அப்போது கலியமூர்த்தி எழுந்த நேரத்தில் அவரது இருக்கையை எடுத்துள்ளனர். இதனை அறியாத கலியமூர்த்தி உட்கார்ந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. கலியமூர்த்திக்கு வளவனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், வளவனூர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் பிரகாஷ், பிரபாகர், ஜெயபிரகாஷ் ஆகிய மூவரை விசாரனைக்காக அழைத்து சென்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுவதாககூறி விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் விழுப்புரம் உட்கோட்ட காவல் கண்கானிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியல் கைவிடப்படாத நிலையில் சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். அப்போது ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் அவரை காவல்துறையினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சம்பவ இடத்திற்கு வந்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்கானிப்பாளர் சசாங் சாய் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இருப்பினும் சாலை கைவிடப்படாத நிலையில் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்க நேரிடும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கையை தொடர்ந்து காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மறியல் காரணமாக விக்கிரவாண்டி கும்பகோணம் சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஏற்கனவே திரெளபதி அம்மன் கோயில் பிரச்சனை தொடர்பாக இரு சமூகங்களிடையே பதட்டமான சூழல் நிலவி வரும் நிலையில் தற்போது இந்த உணவக பிரச்னையால் மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
கிராமங்கள் வளர்ச்சி பெற கடுமையாக உழைப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் - எம்எல்ஏ லட்சுமணன்
துர்நாற்றத்தில் மூழ்கி இருக்கும் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்
புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.