புதிய கட்டடத்தில் பூச்சு வேலையின் போது, உயர் மின்னழுத்த கம்பியில் சிக்கி கொத்தனார் உயிரிழப்பு
சிமென்ட் பூச்சு வேலையில் ஈடுபட்ட போது பக்கவாட்டில் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் எதிர்பாராத விதமாக சுரேஷின் கை உரசியது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், முருங்கப்பாக்கம் கல்லுாரி சாலையில், வணிக நிறுவனம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை பெலாக்குப்பம் பகுதியை சேர்ந்த கான்ட்ராக்டர் அசோக் என்பவர் மேற்கொண்டுள்ளார். திண்டிவனம் அடுத்த ஊரல் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிச்சைப்பிள்ளை என்பவரின் மகன் சுரேஷ் (33) கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று அந்த கட்டடத்தின் வெளிப்புறத்தில் சிமென்ட் பூச்சு வேலையில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் மாலை பக்கவாட்டில் சென்ற உயர் மின்னழுத்த கம்பியில் எதிர்பாராத விதமாக சுரேஷின் கை உரசியது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - எந்தெந்த கட்சிகள் யாருடன் கூட்டணி... வெற்றி நிலைமை என்ன?

Actor soori | ரயில் செட்டில் ராம்... ஆளே மாறிப்போன நிவின்.. அப்டேட் கொடுத்த சூரி!
இதில், மின்சாரம் தாக்கி உடல் எரிந்த நிலையில் கம்பியில் தொங்கினார். மேலும், மின் கம்பி அறுந்து விழுந்ததில் அங்கிருந்த பொது மக்கள் அலறியடித்து ஓடினர். மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்து, சுரேஷை, மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சுரேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த சுரேஷூக்கு, சரளா என்ற மனைவியும், மனிஷா என்ற 7 வயது மகளும், லோகித் என்ற 5 வயது மகனும் உள்ளனர்.
விழுப்புரம்: திண்டிவனத்தில் கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி... உரிய பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்ற கட்டிட பணி.... மின்சாரம் தாக்கும் காட்சி#abpnadu #tindivanam pic.twitter.com/rtsiyzKETj
— SIVARANJITH (@Sivaranjithsiva) February 2, 2022
மேலும் இது தொடர்பாக ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து, உரிய பாதுகாப்பின்றி வேலை செய்ய அனுமதித்த காண்ட்ராக்டர் அசோக், மேஸ்திரி முனிவேல் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் கொத்தனார் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுதயுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















