Minister Gingee Masthan: சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் - தலைமை எடுத்த அதிரடி முடிவு என்ன தெரியுமா?
15 ஆண்டுகளாக செஞ்சி பேரூர் கழக செயலாளராக பதவி வகித்து வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் தம்பி பதவி பறிப்பு- தலைமை எடுத்த அதிரடி முடிவு
விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் செஞ்சி மஸ்தான். செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செஞ்சி மஸ்தானுக்கு சட்ட மன்றத்தில் முதன்முறையாக சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை உருவாக்கப்பட்டு அதனை மஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டது. கடந்த 13ஆம் தேதி மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் விஷ சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் திண்டிவனம் நகராட்சி 20வது திமுக பெண் நகர மன்ற உறுப்பினராக உள்ள ரம்யாவின் கணவர் மருவூர் ராஜா, பிரபல சாராய வியாபாரியான இவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் மருவூர் ராஜா இருக்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அமைச்சரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் பல ஆண்டுகள் இருப்பதாகவும் தவறான நபர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் புகார் எழுந்தது.
இந்நிலையில் தான் அமைச்சர் மஸ்தானின் தம்பியான "காஜா நஜீர்" நகர செயலாளர் பதவி தற்போது பறிக்கப்பட்டுள்ளது. மேலும், மஸ்தான் அமைச்சரானதும் செஞ்சி பேரூராட்சி தலைவராக தனது மகன் மொக்தியார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மேலும் கட்சி ரீதியாக விழுப்புரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளராகவும் உள்ளார். மேலும் அமைச்சரின் மருமகன் ரிஸ்வான் வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். அமைச்சர் மஸ்தானின் தம்பி "காஜா நஜீர்" கடந்த 15 ஆண்டுகளாக செஞ்சி பேரூர் கழக செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் இன்று அவரை பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். செஞ்சியின் புதிய நகர செயலாளராக செஞ்சி பேரூராட்சி 5வது வார்டு உறுப்பினர் கார்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்சிப் பதவிகளில் பல்வேறு மாற்றங்கள் இருக்கலாம் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்