தேர்தல் திருவிழா - கடலூரில் 2,521 வேட்புமனுக்கள் ஏற்பு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாநகராட்சியில் 2,521 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகள் இருக்கின்றன.
கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மய்யம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளான நேற்றுவரை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதன்படி கடலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளா்களின் மனுக்களை சனிக்கிழமை பரிசீலனை நடைபெற்றது. தாக்கல் செய்யப்பட்ட 2,558 வேட்புமனுக்களில் 2,521 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.
கடலூா் மாநகராட்சியில் 350 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், 2 மனுக்கள் மட்டும் நிராகரிக்கப்பட்டன. நகராட்சிகளைப் பொறுத்தவரை மொத்தம் 14 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், நெல்லிக்குப்பத்தில் 2, பண்ருட்டி, சிதம்பரம் தலா 1, விருத்தாசலம் 6, திட்டக்குடி 4 ஆகும். நெல்லிக்குப்பத்தில் 171, பண்ருட்டியில் 255, சிதம்பரத்தில் 166, விருத்தாசலத்தில் 178, திட்டக்குடியில் 170, வடலூரில் 138 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதில் வடலூரில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன.
பேரூராட்சிகளை பொறுத்தவரை மொத்தம் 21 வேட்புமனுக்கள் தள்ளுபடியாகின. இதில், காட்டுமன்னாா்கோவிலில் 7 மனுக்களும், கிள்ளை, ஸ்ரீமுஷ்ணத்தில் தலா 3 மனுக்களும், லால்பேட்டை, சேத்தியாத்தோப்பில் தலா 2 மனுக்களும், அண்ணாமலை நகா், குறிஞ்சிப்பாடி, மங்கலம்பேட்டை, மேல்பட்டாம்பாகத்தில் தலா ஒரு மனுவும் அடங்கும். மீதமுள்ள புவனகிரி, கங்கைகொண்டான், பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், தொரப்பாடி ஆகிய பேரூராட்சிகளில் அனைத்து வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Lata Mangeshkar Passes Away: பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரு தினங்கள் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு
Urban Local Body Election: எப்படி இருந்த கட்சி..! காஞ்சியில் காணாமல் போன தேமுதிக.. காரணம் என்ன?