மேலும் அறிய
Advertisement
Watch Video | குடிக்கும் பாராக மாறிய அரசு அலுவலகம்! குவாட்டர் மற்றும் வாட்டருடன் அரசு ஊழியர்! வீடியோ!
அரசு அலுவலகத்தில் உட்கார்ந்து மது குடிக்கும் ஊழியர் வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது
சமூக வலைதளங்களில் அரசு ஊழியர் ஒருவர் மது குடிக்கும் வீடியோ மிக வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அதிகாரி, தொலைபேசியில் எதிர் முனையில் இருக்கும் ஒருவரிடம் ஒழுங்காக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள் என பேசுகிறார். இதனையடுத்து அவர் மேசையின் முன்னால் மதுபானம் மற்றும் கிளாஸ் இருக்கிறது, சைட் டிஷையும் உண்கிறார் அந்த அதிகாரி. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரல்.
அரசு அலுவலகத்திற்கு மது குடிக்கும் ஊழியர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவும் வீடியோ pic.twitter.com/j0lbjAXyto
— Kishore Ravi (@Kishoreamutha) February 5, 2022
இந்த வீடியோவில் இருக்கும் நபர் குறித்து முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம் பகுதியில் உள்ள சி - பிரிவு அலுவலகத்தில், மாநகராட்சியின் பகுதி மேற்பார்வையாளராக ராகவன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நபர்தான் அடிக்கடி வேலை சமயத்தில் மது அருந்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வீடியோவை நகராட்சியில் வேலை செய்யும் நபர் எடுத்தாரா, அல்லது பொதுமக்கள் வீடியோ எடுத்தனர் என்பது குறித்த எந்தவித தகவலும் தற்போது வெளியாகவில்லை.
மது குடிக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தற்பொழுது நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி 6 மாதங்களில் பார்களை மூட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருவது சமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவும் வீடியோவிற்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அரசு அலுவலகத்திற்கு மது குடிக்கும் ஊழியர் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவும் வீடியோ pic.twitter.com/j0lbjAXyto
— Kishore Ravi (@Kishoreamutha) February 5, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion