Lata Mangeshkar Passes Away: பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரு தினங்கள் துக்கம் அனுசரிப்பு - மத்திய அரசு
Lata Mangeshkar Death: லதா மங்கேஷ்கர் மறைவு காரணமாக இரண்டு நாட்கள் அரசு துக்க நாளாக கடைபிடிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது
இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 1929ம் ஆண்டு பிறந்த இவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவு இந்தியா முழுவதும் உள்ள அவரது ரசிகர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட நாட்டின் பல தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதிற்கு இதமாக திகழ்ந்த லதா மங்கேஷ்கரின் மறைவு காரணமாக, இரண்டு நாட்கள் நாடு முழுவதும் அரசு துக்க நாளாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இரண்டு நாட்கள் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது