மேலும் அறிய

வேலூர் ஜலகண்டேஸ்வரரை சூழ்ந்த ஜலம் - வரலாற்றை ரசித்து செல்லும் பக்தர்கள்

’’அகழியில் இருந்து பாலாற்றுக்குச் செல்லும் வழி கால்வாயை இனிவரும் காலங்களில் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை'’

தண்ணீரில் மிதக்கும் வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் ஆலயம். அரசர்களின் ஆட்சிக் காலத்திலும் சரி, ஆங்கிலேயரின் ஆட்சி காலத்திலும் சரி, சுதந்திர இந்தியாவின் ஆட்சி காலத்திலும் சரி பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வரலாற்று சிறப்புகளையும், பதிவுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது அகழியுடன் கூடிய வேலூர் தரைக்கோட்டை. வேலூர் மாநகரின் மத்தியில் சுமார் 136 ஏக்கர் பரப்பளவில் அழகிய அகழியுடன் அமைந்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க வேலூர் தரைக்கோட்டை கோட்டை.  வேலூர் கோட்டையின் உள்ளே உள்ள கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் முழுவதும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. வேலூர் கோட்டையை சுற்றியுள்ள சுமார் 16 அடி ஆழம் கொண்ட கோட்டை அகழியில் அண்மைக் காலங்களாக பெய்துவரும் வடகிழக்கு பருவமழை காரணமாக அகழியின் நீர்மட்டம் உயர்ந்ததால் ஜலகண்டேஷ்வரர் ஆலயத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.  16 ஆம் நூற்றாண்டின் போது ஆண்டு படி 1526 முதல் 1595 வரை விஜயநகரப் பேரரசின் கீழ் வேலூரை ஆண்ட சிற்றரசரான சின்ன பொம்மு நாயக்கரால் வேலூர் அகழிக்கோட்டை கட்டப்பட்டது. அப்போது தான் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவில் தற்போது உள்ளது போல விரிவாக்கம் செய்யப்பட்டது. 
 
வேலூர் ஜலகண்டேஸ்வரரை சூழ்ந்த ஜலம் - வரலாற்றை ரசித்து செல்லும் பக்தர்கள்
 
அதற்குமுன் சம்புவராயர்கள் காலத்தில் சிறியதாக இருந்த ஜலகண்டேஸ்வரர் கோயில் கோட்டை விரிவாக்கத்தின் போது சிற்றரசர் சின்ன பொம்மு நாயக்கர் விரிவுபடுத்தினார். இந்தியாவில் தற்போது உள்ள வரலாற்று சிறப்பு மிக்க 2000 கோட்டைகளில் சிறந்த கோட்டையாக 7 கோட்டைகளை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது. அதில் ஒன்றாக அகழியுடன் கூடிய வேலூர் தரைக்கோட்டை கோட்டை திகழ்கிறது.  வரலாற்றில் இடம்பிடித்துள்ள கோட்டை ஜலகண்டேஷ்வரர் கோவிலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ள இந்த நிகழ்வை கோவிலுக்கு வரும் பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சியோடு பார்த்து செல்கின்றனர். மழைக்காலங்களில் கோவில் வளாகத்திற்குள் தேங்கும் தண்ணீர் கோட்டை அகழியில் சென்று விழுமாறு வடிகால் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது கோட்டை அகழியில் அளவுக்கு அதிகமான தண்ணீர் உயர்ந்து வருவதால் வடிகால் கால்வாயின் வழியாக அகழி நீர் கோட்டைக்குள் வருகிறது, மற்றொருபுறம் கோவிலுக்குள் இருக்கக்கூடிய தாமரைக் குளம் மற்றும் கிணறு ஆகியவற்றில் நீர் நிரம்பி வழிவதால் கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. 
 
வேலூர் ஜலகண்டேஸ்வரரை சூழ்ந்த ஜலம் - வரலாற்றை ரசித்து செல்லும் பக்தர்கள்
 
மேலும் வேலூர் கோட்டை அகழியில் நீர் உயரும் போது அதன் உபரி நீர் வெளியேறி பாலாற்றில் கலக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது தற்போது அது முறையாக பராமறிக்கப்படாததால் அதில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இதனால் அகழியின் உபரி நீர் வெளியேற முடியாமல் கோட்டை கோவிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அகழியில் இருந்து பாலாற்றுக்குச் செல்லும் வழி கால்வாயை இனிவரும் காலங்களில் சீரமைக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கின்றனர். ஜலத்திற்க்கு மத்தியில் ஈஸ்வரன் லிங்க வடிவில் இருப்பதால் இக்கோவிலில் உள்ள மூலவருக்கு ஜலகண்டேஸ்வரர் என பெயர் புழங்கப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் மூலவர் அமைந்துள்ள சன்னிதியில் நீர் இருப்பதாகவும், அதன் மீதே லிங்க வடிவான ஜலகண்டேஸ்வரர் அருள்பாலித்து வருவதாகவும் பொதுமக்கள் கருதுகிறனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மொழியை வைத்து பிரிக்க பாக்குறாங்க" பிரதமர் மோடி பரபர குற்றச்சாட்டு!
"Sadist அரசு" பரிதாபங்கள் வீடியோவை வைத்து மத்திய அரசை சாடிய ஸ்டாலின்!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
20 ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், நான் இருக்கும் இடமே வேறு- கமல்ஹாசன் அனல் பேச்சு.!
"தெரியாத பெண்ணிடம் I like youனு மெசேஜ் பண்ணா.. இனி பிரச்னைதான்" நீதிபதி பரபர கருத்து!
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
”ஆளுநருக்கு தனி அதிகாரம் இருக்கு” தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு..
Annamalai Tweet: தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
தமிழக அரசு உதவ வேண்டும்... என்ன கேட்கிறார் அண்ணாமலை.?
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
“டெபாசிட் போய்டும் உதயகுமார்! ஓபிஎஸ் நல்லவர்; ஆனால்...” – பொளந்துகட்டிய புகழேந்தி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
யார் அரசியல் பண்றாங்க? இதில் என்ன அரசியல் செய்ய வேண்டி இருக்கு? – தர்மேந்திர பிரதானுக்கு உதயநிதி பதிலடி
Embed widget