மேலும் அறிய

மீன் பிடித்த இருளர்கள்; மின் வயர் திருடியதாக கைது! தவிக்கும் மூவரின் மனைவிகள்!

மீன் பிடித்து விட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த ஊரை சேர்ந்த ஒருவர், அவர்களது வாகனத்தை நிறுத்தி , அவர்கள் மூவரையும் போனில் போட்டோ எடுத்துவிட்டு அனுப்பியுள்ளார்  .

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 3 பழங்குடியினரை , திண்டுக்கல் மாவட்டத்திற்கு வேலைக்குச் சென்றவர்களை , 10 லட்சரூபாய் மதிப்பிலான , காப்பர்  வயர்களை  திருடியதாக , திருப்பூர் மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்  . இது பொய் வழக்கு என்றும் , கைது செய்யப்பட்ட மூவரும் அப்பாவிகள் என்றும் , பாதிக்கப்பட்டவரின் குடும்பாத்தார் , தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதி உள்ளனர் .

விழுப்புரம் மாவட்டம் , விக்கிரவாண்டி வட்டத்திற்குட்பட்ட ,  சிறுவாலை கிராம , இருளர் பகுதியை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (வயது 31 )  இவருக்கு சிவகுமார் (34 ) என்ற  கணவரும் , சரவணன் (11 ) என்ற மகனும் உள்ளனர் .

முன்னதாக , காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  செங்கல் சூளையில் வேலை செய்து வந்த தம்பதியருக்கு ,  கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்ததால் , வேலையின்றி இருந்துள்ளனர் .

மீன் பிடித்த இருளர்கள்; மின் வயர் திருடியதாக கைது! தவிக்கும் மூவரின் மனைவிகள்!

இந்நிலையில் , சிறுவாலை   கிராமத்திற்கு அடுத்துள்ள கெடார்  கிராமத்தை சேர்ந்த மணி மேஸ்திரி என்பவர் அஞ்சம்மாள் மற்றும் அவரது கணவரை தொடர்பு கொண்டு , திண்டுக்கல் மாவட்டத்தில் செங்கல் அறுக்கும் வேலை இருப்பதாக கூறியுள்ளார். ஒரு லட்ச ருபாய் வரை முன்பணம் தருவதாகவும், இருவரும் நாள் ஒன்றுக்கு அறுக்கும்  1000 செங்கலுக்கு , 700 ருபாய் கூலி வழங்கி , அதில் அவர்களுக்கு  கொடுத்த ஒரு லட்சரூபாய் முன்பணத்திற்கு , தினமும் 500 ருபாய் வீதம் பிடித்தம் செய்து கொண்டு மீதி பணத்தை வார  கூலியாக தந்து விடுவதாக கூறியுள்ளார். வறுமை காரணமாக தம்பதி அதற்கு ஒப்புக்கொண்டு திண்டுக்கல் சென்றது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு லட்சரூபாய் முன்பணம் பெற்று , திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பெரிச்சிபாளையத்தில் , தாராபுரம் சுந்தருக்கு சொந்தமான இடத்தில செங்கல் அறுக்கும் வேலைக்குச் சென்றனர். இவர்கள் மூலமாக இவர்களது உறவினர்களான அசோக் குமார் (40 ) , அவரது மனைவி மீனா (36 ) , வெற்றிவேல் ( 29 ) அவரது மனைவி சுப்புலட்சமி (21  ) உள்ளிட்டோரும் முன் பணம் பெற்ற பணிக்கு சென்றனர். 

மீன் பிடித்த இருளர்கள்; மின் வயர் திருடியதாக கைது! தவிக்கும் மூவரின் மனைவிகள்!

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (ஜூலை 24 ஆம் தேதி ) இரவு சிவகுமார் , அசோக் குமார் மற்றும் வெற்றிவேல் ஆகிய மூவரும் , அருகே  உள்ள கொங்குர் கிராமத்திற்கு சென்று அங்குள்ள ஆற்றில் , தூண்டில் மட்டும் வலை கட்டி மீன் பிடித்துள்ளனர் .

இரவு சுமார் 1 மணியளவில் , மீன் பிடித்து விட்டு பெரிச்சிபாளையத்திற்கு , இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டு இருக்கும் பொழுது அந்த ஊரை சேர்ந்த ஒருவர், அவர்களது வாகனத்தை நிறுத்தி , அவர்கள் மூவரையும் போனில் போட்டோ எடுத்துவிட்டு அவர்களை அனுப்பியுள்ளார்  .

மீன் பிடித்த இருளர்கள்; மின் வயர் திருடியதாக கைது! தவிக்கும் மூவரின் மனைவிகள்!

இவர்கள் பெரிச்சிபாளையத்தில் உள்ள செங்கல் சூளைக்கு வந்து உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது , அதிகாலை 3 மணியளவில் , திருப்பூர் மாவட்டம் அலங்கியம் காவல் நிலையத்தில்  இருந்து  சீருடை அணியாத  காவலர் ஒருவர் , அவர்கள் மீன்பிடிக்க சென்ற கொங்குர் கிராமத்தை சேர்ந்த ஊர்மக்கள் 10 பேருடன் வந்துள்ளார்  , செங்கல் சூளையில் தூங்கி கொண்டிருந்த அசோக் குமார் , சிவகுமார் , வெற்றிவேல் ஆகிய  மூவரையும் எழுப்பி , "நீங்கள் கொங்குர் கிராமத்தில் மீன் பிடிப்பது போல சென்று அங்குள்ள , 10  லட்ச மதிப்பிலான நீர் மோட்டார் இணைப்பு கொடுக்க பயன்படுத்தப்படும் காப்பர் வயர்களை திருடி உள்ளதாக புகார் வந்துள்ளது" என்று கூறி , அடுத்த நாள் காலை அலங்கியம் காவல் நிலையத்திற்கு வருமாறு , அவர்களது இரு சக்கர வாகனத்தை அங்கு இருந்து எடுத்து சென்றுள்ளனர் .

அடுத்த நாள் காலை இவர்கள் மூவரும்  அலங்கியம் காவல் நிலையம் சென்ற பொழுது , அங்கு இருந்த உதவி ஆய்வாளர் ஒருவர் ,  அவர்களை கடுமையாக தாக்கி ,  'அசோக் குமார் , சிவகுமார் , வெற்றிவேல் ஆகிய இவர்கள் தான், 10 லட்ச ருபாய் மதிப்பிலான  காப்பர் வயர்களை திருடியவர்கள்' என்று வழக்கு பதிவு செய்யுங்கள் என்று காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்  ,வழக்கு பதிந்தோடு  நில்லாமல் அவர்கள் மூவரையும் , நீதிபதி முன் ஆஜர்படுத்தி ,  திருப்பூர் மாவட்ட சிறைச்சாலையில் அடைத்துள்ளனர் .

என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த இவர்களது மனைவிகள் , இவர்கள் உறுப்பினர்களாக இருக்கும்  பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தை தொடர்பு கொண்டு . பேராசிரியர்  பிரபா கல்விமணி மூலம் ,  புகார் ஒன்றை தயார் செய்து , தமிழ் நாடு காவல் துறை தலைமை இயக்குனர் (டி ஜி பி) , மற்றும் திண்டுக்கல் , திருப்பூர் , விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர் .

மீன் பிடித்த இருளர்கள்; மின் வயர் திருடியதாக கைது! தவிக்கும் மூவரின் மனைவிகள்!

அவர்களது அந்த மனுவில் , நடந்த சம்பவங்களை அனைத்தையும் விவரித்து , 'பொய்வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டுள்ள மூவரும் அப்பாவிகள் என்றும் , அவர்கள் மீன் பிடிக்கவே கொங்குர் கிராமத்திற்கு சென்றதாகவும் , அனால் திருப்பூர் மாவட்ட போலீசார் , இவர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .

இது தொடர்பாக , ABP நாடு செய்தி குழுமத்திடம் பேசிய , பேராசிரிய பிரபா கல்விமணி , "பழங்குடியினர் மீது பொய் வழக்கு போடுவது ஒன்றும் புதியது இல்லை  , ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இருந்தே , பழங்குடியினர் குற்ற பரம்பரையாகவே பார்க்கப்படுகின்றனர் . ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே சுதந்திரத்துக்காக ஆயுதம் எடுத்து போராடி வந்த பழங்குடி மக்கள் மீது , தேசத்துரோக வழக்குகள் மட்டும் திருட்டு வழக்குகள் பதிந்து வந்தனர்  . ஆங்கிலேயர்களை தொடர்ந்து காவல் துறையினரும் , அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் வழக்குகளை  , பழங்குடியினர் மீது சுமத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர் .' இந்த வழக்கை பொறுத்தவரை  முதற்கட்டமாக , சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவரையும் பிணையில் எடுப்பதற்கான வேலைகளை செய்து வருகிறோம் . இதனை தொடர்ந்து , பொய் வழக்கு பதிந்து , அவர்களை கடுமையாக தாக்கி , சிறையில் அடைக்க காரணமாக இருந்த  காவல் துறை அதிகாரிகள் மீது நீதிமன்றத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார் 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget