மேலும் அறிய
மனைவி இறந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியிலேயே உயிரைவிட்ட கணவர் - சோகத்தில் மூழ்கிய கிராமம்
இந்த செய்தியை கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வாணியம்பாடி அருகே மனைவி இறந்த செய்தியை கேட்டு அடுத்த நொடியிலேயே அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்தார். இதனால் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் கிராமத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதியினர் ராஜா (வயது 65) ஜோதி (வயது-60). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.
விவசாயம் செய்து குடும்பத்தை நடத்தி வந்தனர். மனைவி ஜோதி கடந்த 2 ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த இந்நிலையில் ஜோதியை அவரது உறவினர்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அவரது கணவர் ராஜா அடுத்த நொடியே வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இருவர் உடலுக்கும் நேரில் அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். வயது முதிர்ந்த தம்பதியினர் 2 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிராம மக்கள் ஒன்று திரண்டு அவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion