மேலும் அறிய

வேலூர் : 27 பேருக்கு புதிதாக உறுதியானது கொரோனா தொற்று..!

கொரோனா பரிசோதனைகள் பொருத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில் 27 நபர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது .

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்  (வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில்) புதிதாக 45 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது  . மூன்று மாவட்டங்களிலும் இன்று 3 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது .

வேலூர்  மாவட்டத்தில், இன்று மட்டும் 27  நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 49099-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 25 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 47,779ஆக அதிகரித்துள்ளது. இன்று வேலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக இருவர் உயிரிழந்துள்ள  நிலையில், கொரோனா நோய்த்தொற்றால் வேலூர் மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1117-ஆக அதிகரித்துள்ளது  .

இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில்  203  நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக வேலூர் மாவட்டத்திலுள்ள 9  க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .


வேலூர் : 27 பேருக்கு புதிதாக உறுதியானது கொரோனா தொற்று..!

இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் , இன்று மட்டும் 12  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42781  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 11 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 41851 ஆக அதிகரித்துள்ளது. இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் பாதிப்புக்கு , ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனா நோய்க்கு உயிரிழந்ததை அடுத்து ,  கொரோனா நோய் தொற்றுக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது  .

இதன் மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில்  170 நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள 10-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் மற்றொரு அங்கமான திருப்பத்தூர் மாவட்டத்தில் , இன்று  6  நபர்களுக்கு கொரோனா நோய்  பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28722  ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 8 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 28016 ஆக அதிகரித்துள்ளது.

 


வேலூர் : 27 பேருக்கு புதிதாக உறுதியானது கொரோனா தொற்று..!

இன்று பலி எண்ணிக்கை எதுவும் பதிவு செய்யப்படாத நிலையில் , திருப்பத்தூர்  மாவட்டத்தில் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 616-ஆகவே உள்ளது. இதன்மூலம் திருப்பத்தூர் மாவட்டத்தில்  90   நபர்கள் கொரோனா பாதிப்பிற்காக திருப்பத்தூர்  மாவட்டத்திலுள்ள 11-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா நோயாளிகள் பராமரிப்பு நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

கொரோனா பரிசோதனைகள் பொருத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் வேலூர் மாவட்டத்தில்  3271 நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில் 1732 நபர்களுக்கும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1613  நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இதில் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டோர்களில் 0.9 % நபர்களுக்கும் , திருப்பத்தூர் மாவட்டத்தில்  0.8 % நபர்களுக்கும் , ராணிப்பேட்டை மாவட்டத்தில் 0.8 % நபர்களுக்கும் கொரோனா பாசிட்டிவ் என்ற முடிவுகள் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

தலைப்பு செய்திகள்

Vellore Power Cut: வேலூரில் நாளை (15-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வேலூரில் நாளை (15-10-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின் வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Vellore power cut: வேலூரில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
வேலூரில் நாளை (06-10-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Vellore Airport: சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
சுற்றுலா தொடங்கி பொருளாதாரம் வரை - வேலூர் விமான நிலைய மேஜிக் நிகழ்த்துமா? அரசு கவனிக்குமா?
18 ஆண்டுகளாக இழுபறி... ரூ.1,400 கோடி திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டத்தில் புதிய எதிர்பார்ப்பு!
18 ஆண்டுகளாக இழுபறி... ரூ.1,400 கோடி திண்டிவனம்-திருவண்ணாமலை ரயில் திட்டத்தில் புதிய எதிர்பார்ப்பு!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Soori: புதிய அவதாரம் எடுக்கும் சூரி... இனிதே தொடங்கியது பூஜை! இயக்குனர் இவரா?
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! சத்தமாக போன் பேசினால் சிறை, அபராதம் உறுதி!
Embed widget