மேலும் அறிய

PM Modi: பரவும் Deep Fake AI வீடியோக்கள்.. கவலை தெரிவித்த பிரதமர் மோடி..

பரவும் Deep Fake AI வீடியோக்கள்.. கவலை தெரிவித்த பிரதமர் மோடி

வளர்ந்து வரும் தொழில் நுட்பம் மனிதர்களுக்கு நன்மைகளை எந்த அளவிற்கு தருகிறதோ அதேபோல் தீமைகளையும் தருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது.  இந்த தொழில்நுட்பத்தை தற்போது தீய வழியில் பயன்படுத்தும் நோக்கமும் அதிகரித்து வரும் சூழலில்,  ஏஐ டீப் ஃபேக் வீடியோக்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்துள்ளார்.

ரஷ்மிகாவின் போலி வீடியோ:

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவரின் வீடியோவை எடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா முகத்தை வைத்து எடிட் செய்திருந்தனர். அது இணையத்தில் மிகப் பெரியளவில் விவாதத்தைக் கிளப்பியது. எடிட் செய்யப்பட்ட வீடியோ என்பதை கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அந்த வீடியோ உண்மையானதை போன்றே இருந்தது.

இது குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது ஆதங்கத்தை பதிவு செய்தனர். மேலும் இது போன்று நடைபெறமால் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதேபோல் நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் கஜோல் ஆகியோர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட டீப் பேக் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், சில நடிகைகளை ஆபாசமாக சித்தரித்தும் புகைப்படங்கள் வெளியானது. 

முன்னதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், "ஆன்லைன் தளங்களில் தவறான தகவல்கள் பரவினால் அதைத் தடுப்பது அவர்களின் கடமை. இதுபோல பரவும் போலி வீடியோ குறித்த தகவல் கிடைத்தால் உரிய ஆய்வு செய்யப்பட்டு அடுத்த 36 மணிநேரத்தில் அதை அகற்ற வேண்டும். டிஜிட்டல் ஸ்பேஸில் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோல போலியாக எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் உருவாக்குவோருக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்” என்று கூறப்பட்டது.

பிரதமரின் ஏஐ டீப் ஃபேக் வீடியோ:

இந்நிலையில் சமீபத்தில் பிரதமர் மோடி ஒரு விழாவில் பெண்களோடு சேர்ந்து கர்பா நடனம் ஆடுவது போன்ற  ஏஐ டீப் ஃபேக் வீடியோ வைரலானது. இதுகுறித்து டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, " நான் கர்பா நடனம் ஆடுவது போன்ற ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை நான் பார்த்தேன்.

இதுபோன்ற போலி வீடியோக்கள் பரவுவது மிகவும் கவலை அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு செயலி மூலம் இதுபோன்ற வீடியோக்கள் தயாரிக்கப்படுகின்றன. தொழில்நுட்பம் பொறுப்புடன் கையாளப்பட வேண்டும். ஊடகங்கள் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்று கூறினார். 

மேலும் படிக்க: MP Chhattisgarh Election LIVE: நிறைவடைந்தது வாக்குப்பதிவு; 5 மணி நிலவரம்.. சத்தீஷ்கரில் 67.34% - மத்திய பிரதேசத்தில் 71.11%

மேலும் படிக்க: Uttarkhand Tunnel Collapse: 120 மணி நேரம்! சுரங்கப் பாதையில் சிக்கி தவிக்கும் 40 தொழிலாளர்கள்...திக் திக் நிமிடங்கள்!

தலைப்பு செய்திகள்

GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!
உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karur Visit: முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
முதலமைச்சர் விஜயின் இன்றைய கரூர் விசிட் - எங்கு தொடங்கி எங்கு முடியும்? - முழு பயண விவரம்
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
GK Vasan: விஜயை எதிர்க்கும் அரசியல் கட்சிகள்.. சப்போர்ட் செய்த ஜி.கே.வாசன்.. தவெக கூட்டணிக்கு சிக்னலா?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Chezhiyan: காலையிலேயே அதிர்ச்சி.. தேசிய விருது பெற்ற இளம் இயக்குநர் மரணம்.. என்ன ஆச்சு?
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
Udhayanidhi Stalin: மிஸ்டர் உதயநிதி.. இல்லாததை எல்லாம் சொல்லாதீங்க.. வெளுத்து வாங்கிய கர்நாடகா அமைச்சர்!
TN Weather Update: இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
இன்றும் சென்னையில் கனமழை? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? - தமிழக வானிலை அறிக்கை
Nissan Tekton: 5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் SUV எப்படி இருக்கு?
5 ஸ்டார் ரேட்டிங், 19.4KM மைலேஜ், புக்கிங்கிற்கு ரூ.21, 000 - புதிய மிட்-சைஸ் எஸ்யுவி எப்படி இருக்கு?
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
CM Joseph Vijay: களைகட்டிய கரூர்.. 9 மாதங்களுக்குப் பிறகு முதலமைச்சராக செல்லும் விஜய்.. குவியும் எதிர்பார்ப்பு!
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
Embed widget