மேலும் அறிய

Trichy: பயணிகளே.. திருச்சி - வியட்நாமிற்கு இனி வாரத்திற்கு 3 நாட்கள் விமானம்!

நவம்பர் மாதம் 2-ந் தேதி முதல் திருச்சி-வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும், ஹோ சி மின் சிட்டி- திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும் இயக்க இருக்கிறது.

திருச்சி சங்கம் ஓட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட வியட்ஜெட் நிறுவனத்தின் வர்த்தக துணைத் தலைவர் ஜெய் எல்.லிங்கேஸ்வரா பேசுகையில், வியட்நாம் நாட்டின் முன்னணி விமான நிறுவனமாக திகழும் வியட்ஜெட் விமான நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்யும் வகையில் வரும் நவம்பர் 2 முதல் திருச்சி -வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் சிட்டி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும், ஹோ சி மின் சிட்டி - திருச்சி இடையே வாரத்திற்கு 3 விமானங்களையும் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாரத்திற்கு 3 நாட்கள்:

இந்த விமானங்கள் வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திருச்சியில் நள்ளிரவு 12.30 மணிக்கு புறப்பட்டு ஹோ சி மின் சிட்டிக்கு உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு சென்றடைகிறது. அதேபோல் அங்கிருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு இந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு வந்தடைகிறது. தமிழ்நாட்டிலிருந்து வியட்நாமுக்கு நேரடிப் போக்குவரத்து என்பது திருச்சி விமான நிலையத்தின் வளர்ச்சிக்கும். இரு நாடுகளின் சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய மைல்லாக அமையும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Trichy: பயணிகளே.. திருச்சி - வியட்நாமிற்கு இனி வாரத்திற்கு 3 நாட்கள் விமானம்!

சுற்றுலா, பயணம், வர்த்தகம்:

மேலும்,  வியட்நாம் மற்றும் இந்தியா இடையே சுற்றுலா. பொருளாதாரம், வர்த்தக ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொச்சியில் இருந்து ஹோ சி மின் நகரத்திற்கு செல்லும் விமான சேவையுடன், இந்த புதிய சேவையை நாங்கள் துவக்குவதன் மூலம் இந்தியாவின் தென்பகுதியை வியட்நாம் நகரங்களுடன் இணைப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

நாங்கள் குறைந்த கட்டணத்தில் சிறந்த சேவையை வழங்குவதன் மூலம், இரு நாட்டு மக்களிடையிலான பயணம் மற்றும் வர்த்தகம் நல்ல வளர்ச்சி அடையும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார். வியட்நாம் தேசிய சுற்றுலா ஆணையத்தின் அறிக்கையின்படி, நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் வியட்நாமுக்கு வந்த இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை, தொற்றுநோய்க்கு முந்தைய காலத்தைவிட 200 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், வியட்நாமிற்கு சுற்றுலா வரும் நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

தூர கிழக்கின் முத்து:

வியட்நாமின் முக்கிய பொருளாதார, கலாச்சார மற்றும் சுற்றுலா மையமாக திகழும் ஹோ சி மின் நகரம், ஆசிய கலாச்சாரத்தின் தனித்துவமான பண்புகள் மற்றும் நவீன பெருநகரத்தின் பரபரப்பான வாழ்க்கை முறைகள் மற்றும் வியட்நாமில் உள்ள மற்ற நகரங்களை இணைக்கும் முக்கியப் பகுதியில் அமைந்துள்ளது. "தூர கிழக்கின் முத்து" என்று உலக சுற்றுலா பயணிகளால் அறியப்படும் இங்கு புதுமணத் தம்பதிகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஏற்ற ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளது. ஆசியாவில் உள்ள சிறந்த சுற்றுலா நகரங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. மேலும் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வியட்நாமின் புகழ்பெற்ற கடற்கரை பகுதிகளான டா நாங். நா ட்ராங் மற்றும் பிற நகரங்களுக்கும் வியட்ஜெட் விமானம் குறைந்த கட்டணத்தில் அழைத்துச் செல்கிறது.


Trichy: பயணிகளே.. திருச்சி - வியட்நாமிற்கு இனி வாரத்திற்கு 3 நாட்கள் விமானம்!

இந்த சந்தர்ப்பத்தில், இந்தியாவில் இருந்து வியட்நாம் செல்லும் விமானங்களுக்கு பிசினஸ் மற்றும் ஸ்கைபோஸ் இருக்கைகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு செப்டம்பர் 25 முதல் அக்டோபர் 25, 2023 வரை சிறப்பு சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகிறது. அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலத்தில் கூடுதல் சலுகையாக ஒருவழி கட்டணமாக புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ரூ.5,555ஐ நிர்ணயித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு இதன் இணையதளம் www.vieticair.com அல்லது அதன் மொபைல் செயலியை பார்க்கலாம்.

நவம்பர் 2:

நவம்பர் 2 முதல், வியட்ஜெட், புதுடெல்லி, மும்பை, அகமதாபாத், கொச்சி மற்றும் திருச்சி ஆகிய ஐந்து நகரங்களை இணைக்கும் 35 வாராந்திர இரு வழி விமான சேவைகளை வியட்நாமின் ஹனோய் மற்றும் ஹோ சி மின் நகரங்களுக்கு இயக்க உள்ளது. வியட்ஜெட் விமானம். வியட்நாமில் விமானப் போக்குவரத்து துறையில் புரட்சியை ஏற்படுத்தி வருவதோடு மட்டுமல்லாமல், இப்பிராந்தியம் மற்றும் உலகம் முழுவதும் ஒரு முன்னோடி விமான நிறுவனமாகவும் திகழ்ந்து வருகிறது அத்துடன் குறைந்த கட்டணத்தில் சிறப்பான விமான சேவையை பயணிகளுக்கு இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

மேலும் இந்நிறுவனம் சர்வதேச விமான போக்குவரத்து சங்க உறுப்பினராகவும் உள்ளது. வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் என்றதன் அடிப்படையில், உலகின் ஒரே பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு தரமதிப்பீட்டு இணையதளமான airlineratings.com-601 பாதுகாப்பிற்கான 7 நட்சத்திர அந்தஸ்தை இந்நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் ஏர்பைனான்ஸ் ஜர்னல் உலகின் 50 சிறந்த விமான நிறுவனங்களில் ஒன்றாக இந்நிறுவனத்தை பட்டியலிடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
தனியார் பேருந்துகளின் வேகப் போட்டி... அலறவிடும் ஏர்ஹாரன்கள்: உயிரை கையில் பிடித்தபடி செல்லும் மக்கள்
Trichy power cut: திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
திருச்சியில் நாளை (ஆக.04) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? பட்டியல் இதோ!
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
வாடகை பாக்கி வைத்திருந்த கடைகள்... அதிரடியாக பூட்டி சீல் வைத்த திருச்சி மாநகராட்சி
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...
சென்னையிலிருந்து திருச்சிக்கு இனி 3 மணி நேரம்தான்...! இனி டோல்கேட்டில் நிற்கத் தேவையில்லை...

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget