மேலும் அறிய

Trichy gun shoot: திருச்சியில் காவல்துறையினருக்கு அரிவாள் வெட்டு..2 ரவுடிகள் மீது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன?

திருச்சியில் காவல்துறையினரிடமிருந்து தப்பிக்க முயன்ற இரண்டு ரவுடிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது ஏற்கனவே பல்வேறு கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன, இந்நிலையில் கைது செய்யப்பட்ட அவர்களிடமிருந்து நகைகளை மீட்க, காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அபோது, உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே சென்றபோது, போலீசாரின் ஜீப்பில் இருந்து இருவரும் தப்பிக்க முயன்றுள்ளனர். துரத்திப்பிடிக்க முயன்றபோது, போலீசார் மீது ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையாக, துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, ரவுடிகள் அரிவாளால் தாக்கியதில், காவலர் சிற்றறசு என்பவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.  தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், திருச்சியில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடந்தது என்ன?

திருச்சி மாவட்டம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்காக, காவல்துறை தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உறையூர் பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக, திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு  தகவல் வந்துள்ளது . அதனை அடுத்து துரை, சோமு, அனுராதா மற்றும் ஹரிஹரன் ஆகிய நான்கு பேரையும் காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.  தீவிர விசாரணையில் உறையூர் குழுமாயி அம்மன் கோயில் அருகே, அதிகளவில் கஞ்சாவை  பதுக்கி வைத்துள்ளோம் என கூறி காவல்துறையினரை அந்த நான்கு பேரும் அழைத்துச் சென்றனர்.

தாக்குதலும்.. துப்பாக்கிச்சூடும்..

குறிப்பிட்ட கோயில் அருகே சென்றதும் திடீரென்று துரை மற்றும் சோமு ஆகியோர், தாங்கள் அங்கு மறைத்து வைத்திருந்த கத்திகளை எடுத்து காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினர்.  இதில் காவல் ஆய்வாளர் மோகன் மற்றும் இரண்டு காவலர்கள் மீது கத்தியால் தாக்குதல் நடத்தினர். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் அந்த இரண்டு பேர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனை தொடர்ந்து காயமடைந்த காவல்துறையினர்,  துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த துரைசாமி மற்றும் சாமி என்கிற சோமசுந்தரம் ஆகியோர்  திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குற்றப்பின்னணி:

திருச்சி புத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த துரைசாமி மற்றும் சோமசுந்தரம் என்கிற சாமி இருவரும் சகோதரர்கள் ஆவர். துரைசாமி மீது கஞ்சா கடத்தல்,கொள்ளை, ஆள் கடத்தல் மற்றும் 5 கொலை வழக்குகள் என 69 வழக்குகள் உள்ளன. இதில் திருச்சி மாவட்டத்தில் மட்டும் 30 வழக்குகளும்,  தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மீதி வழக்குகளும் உள்ளன. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP Posters In Ramanathapuram: ”அதிமுக கூட்டணி வேண்டாம் அண்ணாமலையே போதும்” பாஜக போஸ்டரால் பரபரப்புAnnamalai BJP: தேசிய அரசியலில் அண்ணாமலை.. மாநில அரசியலுக்கு ஆப்பு? சீனியர்ஸ் பக்கா ஸ்கெட்ச்Irfan Controversy | சமாதான கொடி தூக்கிய இர்பான் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்” ESCAPE ஆகுறது வேலையா”Divyabharathi | ”ஜி.வி-யோட DATING-ஆ?அதுவும் கல்யாணமானவன் கூட” WARNING கொடுத்த திவ்ய பாரதி | GV Prakash

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
TNPSC: மாஸ் காட்டும் டிஎன்பிஎஸ்சி; 3 மாதங்களில் 7557 பேர் செலக்ட்- ஜெட் வேகத்தில் செய்த சீர்திருத்தங்கள் தெரியுமா?
Stalin Vs EPS: ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
ஏங்க.. நாங்க பண்றது இருக்கட்டும், நீங்க என்ன பண்ணீங்க.? இபிஎஸ்-ஐ வெளுத்த ஸ்டாலின்...
BJP TN New Leader: பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
பாஜக தமிழ்நாடு புதிய தலைவர் யார்.? ரேஸில் குதித்த கருப்பு முருகானந்தம்.. புதிய அப்டேட்...
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Irfan Controversy: மனுஷனாவும் இல்ல..! இஸ்லாத்தையும் மதிக்கில - காசுக்காக அலையும் இர்ஃபான் - வேடிக்கை பார்க்கும் அரசு
Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?
Nithyananda: ’’எனக்கு END-ஏ கிடையாதுடா’’ நேரலையில் பேசப்போகும் நித்தியானந்தா! வெளியான அறிவிப்பு- எப்போது?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
Waqf Amendment Bill: இன்று தாக்கலாகிறது வக்பு மசோதா? நாடாளுமன்றத்தில் நிறைவேறுமா? பாஜகவிற்கு பலம் இருக்கா?
BSNL IPL Special: BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, அவங்க கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
BSNL ரசிகர்களாக மாறும் IPL ரசிகர்கள்.. ஆமாங்க, அவங்க கொண்டுவந்துருக்கற பிளான் அப்படி...
Karthigai Deepam:  கார்த்தியை மதிக்காத ரேவதி! மகேஷை வறுத்தெடுத்த சாமுண்டீஸ்வரி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
Karthigai Deepam: கார்த்தியை மதிக்காத ரேவதி! மகேஷை வறுத்தெடுத்த சாமுண்டீஸ்வரி - சூடுபிடிக்கும் கார்த்திகை தீபம்
Embed widget