திருச்சியில் மோசடி புகார்கள் அதிகரிப்பு, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் - காவல் ஆணையர் வேண்டுகோள்
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றும் போலியான நிறுவனம் மற்றும் கன்சல்டன்சியிடம் ஏமாற வேண்டாம் - திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி
திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.. ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், பொது மக்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் காவல் துணை ஆணையர்கள், சரக உதவி ஆணையர்கள் மற்றும் சைபர் கிரைம் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கபட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணி நியமன ஆணை (offer Letter) வழங்குவதாக தினசரி நாளிதழ்களில் வரும் விளம்பரங்கள், செயலிகள்(APP), வலைதள தொடர்புகள் (Links) மற்றும் சமூகவலைதளம் மூலம் வரும் விளம்பரங்களை நம்பி பட்டதாரி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு வேலைக்கு அனுப்பாமல் ஏமாற்றுவதாக போலியான கன்சல்டன்சிகள் மீது தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு வழக்குகள் பதிவாகி வருகின்றது. ஆகையால் இது சம்மந்ததாக பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக இளைஞர்கள் பின்வரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் :
கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்தால் அதிகம் லாபம் பெறலாம் மற்றும் தினசரி விளம்பரத்தை லைக்(Like) செய்தாலோ அல்லது பகிர்ந்தலோ(Share) சம்பாதிக்கலாம் என வரும் விளம்பரங்களை நம்ப வேண்டாம்.பொதுமக்கள் வெளிநாடுகளில் வேலை வாங்கிதரும் கன்சல்டன்சியிடம் (Consultancy) பணம் செலுத்தும் முன்பு கன்சல்டன்சியானது அரசிடம் முறையாக பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற்றுள்ளதா என்பதை தெரிந்து கொண்ட பின்பு வெளிநாட்டு பணிகளுக்கு அல்லது படிக்க செல்ல கன்சல்டன்சியிடம் பணம் செலுத்தவேண்டும். வேலைக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கும் நிறுவனத்தினருடன் எழுத்து மூலமான ஒப்பந்தங்களை (Agreement) ஏற்படுத்திகொள்ளும்படியும், வேலைக்கான விசா (Employment Visa) தவிர்த்து, வேறு வகையான விசாக்கள் குறிப்பாக சுற்றுலா விசாவில் (Tourist Visa) வேலைக்கு செல்ல வேண்டாம் என்றும், பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறைப்பாக முகவர்களிடம் காசோைைல அல்லது Net Banking மூலம் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள். எக்காரணம் கொண்டும் பணமாக(ரொக்கமாக) கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு பணம் கொடுக்க நேரும்பட்சத்தில் கொடுத்த பணத்திற்கான ரசீது (Receipt) பெற்றுக்கொண்டு, பணம் கொடுக்க வேண்டும். மேலும் இதுபோன்று ஆன்லைன் மற்றும் போலி கன்சல்டன்சிகள் (Consultancy) வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக வெளியிடும் போலி விளம்பரங்களை நம்பி, இளைஞர்கள் யாரும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், இதுபோன்று மோசடியில் ஈடுபடும் நபர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கும்மாறும் அல்லது Helpline No.1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற website-ல் புகார் அளிக்குமாறு திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார். மேலும், திருச்சி மாநகரில் தொடர்ந்து மோசடி குறித்த புகார்கள் அதிகரித்து வருவதால் 24 மணி நேரமும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.