மேலும் அறிய

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

முக்கொம்பு காவிரி தடுப்பணை கதவணைகள் புனரமைக்கும் பணி மற்றும் கொள்ளிடம் மேலணையில் உள்ள தற்காலிக தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது.

கொள்ளிடம் தடுப்பணை 1836ம் ஆண்டு வெள்ளையர்களால் கட்டப்பட்டது. 45 மதகுகள் ஒரு பிரிவாகவும், 10 மதகுகள் இன்னொரு பிரிவாகவும் மொத்தம் 55 மதகுகளுடன் இது உருவாக்கப்பட்டது. காவிரியில் மழை காலங்களில் மிக அதிக வெள்ளம் வரும்போது கொள்ளிடத்தின் வழியாக உபரிநீரை வெளியேற்றவும், மற்ற காலங்களில் பாசனம் மற்றும் குடிநீருக்காவும் இந்த திட்டத்தை உருவாக்கினார்கள். கடந்த 2018 ஆம் ஆண்டு கர்நாடகத்திலும், கேரளத்திலும் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழிந்ததால் உபரிநீர் முழுவதும் மேட்டூர் அணைக்கு விடப்பட்டது. மேட்டூர் அணை கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ம் தேதி நிரம்பியது. அதன் பிறகும் வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் வந்தது. அதை அப்படியே மேட்டூர் அணையில் இருந்து திறந்து விட்டனர். இந்நிலையில் பவானி, அமராவதி அணைகளில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரியில்வினாடிக்கு 2.4 லட்சம் கனஅடி சென்றது. இந்த வெள்ளத்தை காவிரி தாங்காது என்பதால் காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியை மட்டும் வெளியேற்றிவிட்டு 2.1 லட்சம் கனஅடி தண்ணீரை கொள்ளிடம் வழியாக வெளியேற்றினர்.

தொடர்ந்து ஒருவாரத்திற்கு மேல் 1 லட்சம் கனஅடிக்கு மேல் கொள்ளிடம் வழியாக வெளியேற்றப்பட்டதால் கடந்த ஆண்டு இதே நாளில்(22.8.2018) இரவு 8 மணி அளவில் கொள்ளிடம் தடுப்பணை உடைந்து போனது. ஆனால் உடைப்பு ஏற்பட்டபோது கொள்ளிடம் வழியாக வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடி மட்டுமே தண்ணீர் சென்றது. 45 மதகுகள் கொண்ட தடுப்பணையில் 5 முதல் 13 வரை உள்ள மதகுகள் வெள்ளத்தில் அடைத்து செல்லப்பட்டது. இதனால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காதோ என்ற  அச்சமான சூழ்நிலையில் இருந்தார்கள்.

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இதனை தொடர்ந்து பழைய அணையை பலப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருந்தாலும், புதிய கதவணையும் ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது. இந்தச்சூழலில், கர்நாடகத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பெய்துவரும் மழையால் கிடைக்கும் உபரிநீர் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் தருணங்களில் கொள்ளிடத்தில் பிரித்து அனுப்புவதில் தற்காலிக காப்பணை இடையூறாக உள்ளது. புதிய கதவணை இல்லாத தருணங்களில் பாதுகாப்பு அரணாக இருந்த தற்காலிக காப்பணையானது, புதிய கதவணை கட்டப்பட்ட பிறகு இடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. ஏனெனில், சேதமடைந்த கதவணையில் ஷட்டர்கள் வழியாக தண்ணீரை வெளியேற்றலாம். ஆனால், சேதமடைந்த பகுதியில் மதகு எண் 4 முதல் 16 வரையில் கட்டப்பட்டுள்ள தாற்காலிக காப்பணையில் ஷட்டர்கள் கிடையாது. முழுவதும் கான்கீரீட் கட்டமைப்புதான். எனவே, வெள்ள நீரை தேக்கி வைத்து தேவையான தருணங்களில் வெளியேற்ற முடியாது. வெள்ளக் காலங்களில் காப்பணை இடையூறாவே உள்ளது. எனவே, இதனை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் திட்டமிட்டு அரசுக்கு பரிந்துரை செய்தனர். அரசின் ஒப்புதல் பெற்று, காப்பணை அகற்றும் பணி நேற்று தொடங்கியது.

திருச்சி முக்கொம்பு பழைய தடுப்பணையை இடிக்கும் பணி தொடங்கியது

இந்தாண்டு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்பாக காவிரி கதவணையில் உள்ள மதகுகளில் பொருத்தப்பட்டுள்ள ஷட்டர்களையும் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. கதவணையில் உள்ள 41 கதவணைகளையும் புனரமைக்கும் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. முக்கொம்பு மேலணையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில், நீர்வளத் துறையின் திருச்சி ஆற்றுப் பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் தமிழ்ச் செல்வன், ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட உதவி செயற்பொறியாளர் பி. முருகானந்தம், மேலணை உதவி பொறியாளர் பி. ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget