மேலும் அறிய

அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை அமல்படுத்தப்படும் - அமைச்சர் சிவசங்கர்

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை அமல்படுத்தப்படும் என்றும், தீபாவளி பண்டிகையையொட்டி 16,888 அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டி.

தமிழகத்தை பொறுத்தவரை  தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொள்வார்கள். சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, பேருந்துகளின் தேவை அதிகரிக்கும். அதிக நெரிசலில் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். இந்த சமயங்களில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் மக்கள் கஷ்டப்படும் அவலமும் ஏற்படும். இந்த நிலையில்தான் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் தமிழ்நாட்டில் பண்டிகை நாட்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்றில் இருந்து இயக்கப்படுகின்றன. மேலும் சனி , ஞாயிறு விடுமுறையும் தீபாவளியோடு சேர்த்து வருகிறது. இதனால் மக்கள் இந்த முறை அதிக அளவில் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3 நாட்கள் அரசு விடுமுறை வருவதால் மக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 23ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை அமல்படுத்தப்படும் - அமைச்சர் சிவசங்கர்

தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. இதில் சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு மட்டும் கூடுதலாக 3 நாட்களில் 10518 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதேபோன்று திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மற்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர் செல்வதற்கு 6370 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது கூறியது.. சட்டமன்ற கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.500 கோடி மதிப்பீட்டில் 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் எனவும், நல்ல நிலையில் உள்ள 1,000 பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு பேருந்துகளில் பார்சல் சேவை வசதி தற்போது சோதனை முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டுமே பார்சல் வசதி சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனுடைய முழுமையான வெற்றியை பொறுத்து தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

அரசு பேருந்துகளில் பார்சல் வசதி சேவை அமல்படுத்தப்படும் - அமைச்சர் சிவசங்கர்

இதொடர்ந்து பேசிய அமைச்சர் சிவசங்கர், "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 16,888 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அனைத்து இடங்களிலும் அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க போக்குவரத்து கழக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று ஆம்னி பேருந்துகள் கட்டணம் குறித்து ஏற்கனவே ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்த கட்டணத்தின்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா? என்பது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிப்பார்கள்" என்று தெரிவித்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
TN Rain Update: வாரத்தின் முதல் நாளே சம்பவம்..! 7 துறைமுகங்களில் புயல் கூண்டுகள், கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Yuvanraj Nethrun Daughter Abeneya : அதை சொல்ல நீ யாரு? சாப்பாட்டை விமர்சித்த நெட்டிசனை அலறவிட்ட நடிகர் நேத்ரன் மகள் அபிநயா!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Science Facts: பிரம்மிப்பூட்டும் அறிவியல் உண்மைகள் - மூளையை உண்ணும் மூளை, இயர் பாட் ஆப்பு, பார் கோட்..!
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
Breaking News LIVE: தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுப்பா? விஜய்யை மறைமுகமாக சாடிய திருமாவளவன்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Embed widget