(Source: ECI/ABP News/ABP Majha)
திருச்சி மாவட்டத்தில் லஞ்சம் வாங்கிய மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
திருச்சியில் ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை சத்தியமூர்த்தி வாங்கிய போது சுற்றி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் மோட்டார் வாகன ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சத்தியமூர்த்தி. இவரிடம் துறையூரில் ஓட்டுனர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சண்முகம் என்பவர் மூன்று நபர்களுக்கு ஓட்டுனர் உரிமம் எடுப்பது தொடர்பாக அணுகியுள்ளார். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி நபர் ஒன்றுக்கு ரூ. 2000 விதம், 3 நபர்களுக்கு 6000 ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதனை அடுத்து 2 நாட்கள் கழித்து வருவதாக கூறிய சண்முகம், இச்சம்பவம் தொடர்பாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இப்புகாரியின் பேரில் விசாரணை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், தலைமையில் காவல் ஆய்வாளர்கள் சக்திவேல், பாலமுருகன், சேவியர் ராணி ஆகியோர் சண்முகத்திடம் ரசாயனம் தடவிய 6 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியிடம் கொடுக்க கூறினார். இதனையடுத்து நேற்று அலுவலகம் சென்ற சண்முகம் அங்கு பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தி யிடம் பணத்தை கொடுத்தார். ரசாயனம் தடவிய லஞ்சப் பணத்தை சத்தியமூர்த்தி வாங்கிய போது சுற்றி இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மோட்டார் வாகன ஆய்வாளர் சத்தியமூர்த்தியை கையும் களவுமாக கைது செய்தனர்.
மேலும் அலுவலகத்தில் லஞ்சப் பணம் ஏதேனும் ஒழித்து வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். துறையூரில் லஞ்சம் பெற்ற புகாரில் மோட்டார் வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேலும் அலுவலகத்தில் ஆவணங்கள் மற்றும் பணம் இருக்கிறதா? என்று தீவிர சோதனை நடத்தினார்கள். இச்சம்பவம் துறையூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் லஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் தவறு , பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் . குறிப்பாக அரசு துறை அதிகாரிகள் மக்களிடம் லஞ்சம் பெற்றால் அது யாராக இருந்தாலும் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்க்கொள்ளபடும் என திருச்சி லஞ்சம் ஒழிப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்