திருச்சி மருத்துவக்கல்லூரி மாணவர் தற்கொலை - அரியர் மட்டும்தான் காரணமா என போலீஸ் விசாரணை
திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் பயிற்சி மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சின்ன மண்டவாடி பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் ரஞ்சித் குமார் (24) திருச்சி கி.ஆ.பெ அரசு மருத்தவ கல்லூரியில் எம்பிபிஎஸ் பயின்று வருகிறார். தற்போது திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள விடுதியில் அறை எண் 25 இல் தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கல்லூரி சென்று விடுதிக்கு திரும்பிய ரஞ்சித்குமார் அதன் பிறகு வெளியே வரவில்லை. கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது நேற்று அதிகாலை வரை கதவு திறக்கப்படாததால் பக்கத்து அறையில் அறையை சேர்ந்த கோகுல் என்ற மருத்துவ மாணவர் ரஞ்சித்குமார் அறைக்கதவை தட்டி உள்ளார். வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசு மருத்துவமனை காவல் நிலையத்திற்கு கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின் விசிறியில் நைலான் கயிற்றால் தூக்கிட்டு ரஞ்சித்குமார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது, பின்னர் காவல்துறையினர் மாணவன் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறுதியாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறாமல் ரஞ்சித்குமார் அரியர் வைத்துள்ளார். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உயர் படிப்பு படிக்க செல்ல முடியும் அதுவும் ஆறுமாதம் காலதாமதம் ஆகும். என்ற மனக் கவலையில் இருந்துள்ளார் மற்ற மாணவர்கள் கடந்த ஜூலை மாதமே பயிற்சியை முடித்து சென்றுவிட்டனர் இதனால் மனமுடைந்த ரஞ்சித்குமார் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அரியர் மட்டுமே காரணமா அல்லது காதல் பிரச்சினை உள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்தது மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டபோது.. அவருடைய நண்பர்கள், மற்றும் அருகில் தங்கி இருந்த மாணவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில மாதங்களாக ரஞ்சித்குமார் அடிக்கடி தனிமையில் இருப்பார். யாரிடமும் அவ்வளவாக மனம்விட்டு பேச மாட்டார், அவரை பார்க்கும் போது மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதாக தெரிந்தது, என சக மாணவர்கள் தெரிவித்தனர். அவருடைய சக நண்பர்கள் தேர்வு முடிந்த பிறகு இதிலிருந்து சென்று விட்டனர் இவர் அரியர் வைத்ததால் இங்கேயே இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் அரியர் வைத்தது உடனடியாக முடித்தால் மட்டுமே அடுத்த பணிக்கு செல்ல முடியும் இந்த சூழ்நிலையில் அரியர் வைத்தது தனது வீட்டுக்கு தெரிந்தால் பெற்றோர்கள் என்ன நினைப்பார்கள் என்ன செய்வார்கள் என்று பலமுறை யோசித்து கொண்டே அச்சத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்வது செய்து கொள்வதற்கு இரு நாளுக்கு முன் மிகுந்த மிகுந்த மன உளைச்சலில் ரஞ்சித்குமார் இருந்ததாகவும் யாரிடமும் முகம் கொடுத்து பேசாமல் தனி அறையிலேயே தாழிட்டு இருந்ததாக தகவல்களை மாணவர்கள் தெரிவித்தனர்.