Lok Sabha Election 2024: திருச்சியில் தேர்தல் நேரத்தில் மூத்த குடி மக்களுக்கு பேருந்தில் செல்ல இலவச பஸ் பாஸ்
தேர்தல் நாளன்று மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடி மையத்திற்கு செல்ல பொதுபோக்குவரத்தை பயன்படுத்துவதற்கு இலவச பஸ்பாஸ் வழங்கப்படும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேதி அறிவிக்கப்பட்டதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் 16.03.2024 பிற்பகல் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. ஆகையால் அனைவரும் தேர்தல் விதி முறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகளை கண்காணிக்க குழுக்கள், புகார் எண் அறிவிப்பு..
மேலும் திருச்சி மாவட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகளை கண்காணித்திடும் பொருட்டு, 81 பறக்கும் படைகள், 81 நிலையான கண்காணிப்புக்குழுக்கள், 9 வீடியோ நிலையான கண்காணிப்பு குழுக்கள், வேட்பாளர்களால் தேர்தலுக்காக செலவிடப்படும் தொகையினை கண்காணித்திட 9 செலவு கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான புகார்களை 1800 599 5669 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம். மேலும் புகார்களை 6384001585 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும் புகார்களை தெரிவிக்கலாம். புகார்கள் அனைத்திற்கும் 24 மணி நேரத்திற்குள் தீர்வுகள் மேதெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் நடத்த விதிமுறைகளை முறையாக அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் விதிகளை மீறுவோர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் பிரதீப் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ்..
திருச்சி மாவட்ட தோ்தல் அலுவலரும், கலெக்டருமான பிரதீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மூத்த குடிமக்கள் பார்வை மற்றும் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் பலவீனமான இயக்கம் கொண்ட வாக்காளர்கள் தேர்தல் நாளில் வாக்களிப்பதற்கு அவர்களது இருப்பிடத்தில் இருந்து வாக்குசாவடி செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் செய்து இந்திய தோ்தல் ஆணையத்தால் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. வாக்களிக்கும் நாளில் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்.பொதுப் போக்குவரத்து வசதி இல்லை என்றால், அவா்கள் வசிக்கும் இடத்திலிருந்து வாக்குச் சாவடிக்கு இலவசமாக அழைத்துச் செல்லவும், இறக்கவும் ஏற்பாடு செய்யப்படும். தகுதியுள்ள வாக்காளா்கள் இந்த வசதிகளைப் பெறுவதற்கு ஏதுவாக இந்திய தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சக்க்ஷம் இசிஐ ஆப் அல்லது 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்திய தோ்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள வாக்காளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.