மேலும் அறிய

கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம், கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 73 ஏரிகளும், வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடியில் ஒரு நீர்த்தேக்கம் உள்ளன. இந்த நிலையில் மாவட்டத்தில் மற்றொரு நீர்த்தேக்கமாக ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே தமிழக அரசின் பொதுப்பணித்துறை-நீர்வள ஆதாரத்துறை சார்பில் நீர்த்தேக்கம் அமைக்கும் பணி கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்கான பணிகள் அந்த ஆண்டிலேயே மார்ச் மாதம் 3-ந் தேதி தொடங்கப்பட்டது. 2 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் என்று கூறிய பொதுப்பணித்துறை தற்போது 6 ஆண்டுகள் கடந்த நிலையில் இப்போது தான் 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. இறுதி கட்ட பணியான நீர்த்தேக்கத்தின் வலது, இடது புறங்களில் பாசன வாய்க்கால்கள் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நீர்த்தேக்க பணிகள் நிறைவடைந்தால் கொட்டரை, ஆதனூர், கூடலூர், கூத்தூர், புஜங்கராயநல்லூர், தொண்டபாடி, நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாய நிலங்கள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

இந்த நீர்த்தேக்கத்துக்காக கொட்டரை, ஆதனூர் கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. மேலும் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் மறுகரையில் உள்ள 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு செல்ல பாதை வசதி இல்லாததால் விவசாயிகள் சரியாக விவசாயம் செய்ய முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்காலிக நடைபாதை வசதி அமைத்து தரப்படும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு பெயரளவுக்கு மட்டுமே உள்ளது.

கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

மேலும்  இப்பகுதியில் பாதை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது நீர்த்தேக்கத்தில் தண்ணீர் நிரம்பியும் பயன்பாடில்லாமல் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.  கொட்டரையை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறுகையில், "6 ஆண்டுகளை கடந்தும் கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவடையாததால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பாசன வாய்க்கால்கள் அமைக்கப்படாதால் நீர்த்தேக்கத்தின் நிரம்பியுள்ள தண்ணீர் கசிந்து விவசாய நிலங்களுக்கு தேங்கி வரும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் அந்த விவசாயிகளுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண தொகை வழங்க வேண்டும். மேலும், பாசன வாய்கால்களை அமைக்கும் பணிகளை தொடர வேண்டும். நீர்த்தேக்கத்தின் மறுகரையில் உள்ள விவசாய விளை நிலங்களுக்கு சென்று வர தார்சாலை அமைத்து தர வேண்டும். கொட்டரை நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget