மேலும் அறிய

மக்களின் கனவு திட்டம்...காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதற்கட்ட பணிகள் தொடக்கம்

கரூர், திருச்சி, புதுக்கோட்டை மக்களின் கனவு திட்டமான காவிரி,வைகை, குண்டாறு இணைப்பு திட்ட முதற்கட்ட பணிகள் தீவிரமாக தொடங்கி உள்ளது.

காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தால், வெள்ளக் காலங்களில் காவிரியில் உபரியாக வெளியேறும் நீரை கரூர் மாவட்டத்தின், மாயனூர் தடுப்பணையில் தடுத்து, திருச்சி மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை மாவட்டம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களின் வறண்ட பகுதிகள் வழியாக குண்டாற்றுடன் பாசானக் கால்வாய்களை வெட்டி இணைப்பதன் மூலமாக இப்பகுதிகள் நீர் வளமும், நில வளமும் பெறும் வகையில் இத்திட்டத்திற்கு பிப்ரவரி 2021-இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டின் கனவு திட்டங்களில் ஒன்றாக காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டம் உள்ளது. குறிப்பாக விவசாயிகளின் நீண்ட நாள் கனவு திட்டமாகவும் உள்ளது. மேலும்  காவிரியில் இருந்து வைகை மற்றும் குண்டாறு வரை கால்வாய் அமைத்து, காவிரியில் கிடைக்கும் உபரி நீரை மாநிலத்தின் தண்ணீர் பற்றாக்குறை உள்ள தென் பகுதிகளுக்கு திருப்பி விடுவதே திட்டத்தின் பிரதான நோக்கமாகும். காவிரியின் உபரி நீரை தெற்கு வெள்ளாறு, வைகை மற்றும் இறுதியாக குண்டாறு வரை கொண்டு செல்வதற்காக, 262 கி.மீ. நீளமுள்ள புதிய இணைப்புக் கால்வாய் அமைக்கப்பட உள்ளது. இது காவிரியில் மாயனூர் தடுப்பணையில் இருந்து தொடங்குகிறது. இதன் மூலம் சுமார் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, மாயனூர் தடுப்பணையில் இருந்து தெற்கு வெள்ளாறு வரை சுமார் 118.45 கி.மீ., தொலைவுக்கு ரூ.6,941 கோடி மதிப்பீட்டில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கால்வாய் கரூர் மாவட்டத்தில் 47.23 கி.மீ. தூரத்திலும், திருச்சி மாவட்டத்தில் 18.89 கி.மீ தொலைவிலும் மற்றும் புதுக்கோட்டை 52.32 கி.மீ. தூரத்துக்கும் பயணிக்கிறது. தற்போது முதல் கட்ட பணிகளில் ஒன்றாக மாயனூர் தடுப்பணையில் இருந்து 4.10 கி.மீ. தூரத்துக்கும், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 5.35 கி.மீ., நீளத்துக்கும் 2 வழித்தடங்களில் கால்வாய் அமைக்க ரூ.331 கோடி செலவில் பணிகள் நடந்து வருகிறது. 

மக்களின் கனவு திட்டம்...காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதற்கட்ட பணிகள் தொடக்கம்

மேலும், இதுவரை 78 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 3 மாவட்டங்களில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தத் திட்டத்திற்கு கரூர் மாவட்டத்தில் 427.81 ஹெக்டேர் , திருச்சி மாவட்டத்தில் 200.41 ஹெக்டேர் பட்டா நிலமும், புதுக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டத்தில் 585.05 ஹெக்டேர் பட்டா மற்றும் அரசுப் புறம்போக்கு நிலங்களும் தேவைப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் கட்டும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். ரம்யா தேவி உடன் இருந்தார்.

மக்களின் கனவு திட்டம்...காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதற்கட்ட பணிகள் தொடக்கம்

பின்னர் நிறுவன ஆதாரத்துறை செயற்பொறியாளர் எஸ். சிவகுமார் கூறும்போது, நிலம் கையகப்படுத்துதல் மற்றும் கால்வாய் அமைக்கும் பணி ஆகிய இரண்டும் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை, 237.97 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, மீதமுள்ள பகுதிக்கு ஏற்ப, செயல்முறை நடந்து வருகிறது. நிலம் கையகப்படுத்துதல் எந்த தடங்கலும் இன்றி முன்னேறும் வகையில், குறிப்பாக நிதி கிடைப்பதை உறுதி செய்ய தேவையான உத்தரவுகளை அரசு பிறப்பித்துள்ளது. இந்த நிதியாண்டிற்குள் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் இரு வழித்தடங்களில் கால்வாய் அமைக்கும் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த கால்வாயின் முதல் கட்டத்தின் மூலம் கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் 42,170 ஏக்கர் பாசன வசதியும், 342 பாசன குளங்கள் பாசன வசதியும், பெறும். 2-ம் கட்டமாக தெற்கு வெள்ளாற்றையும் வைகையையும் இணைக்கும், சுமார் 110 கி.மீ தூரமும், 3-வது இறுதிக் கட்டம் வைகையை குண்டாற்றுடன் (34.04 கி.மீ) இணைக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
புயல் எங்கே உள்ளது? நாளை எங்கெல்லாம் விடுமுறை ? ரெட் அலர்ட் எங்கு: முக்கிய வானிலை அப்டேட்.!
TN Rain; கனமழை எதிரொலி மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை இரண்டாவது நாளாக விடுமுறை...!
இரண்டாவது நாளாக நாளை மயிலாடுதுறை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை...!
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Viduthalai 2 Trailer : வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2 பட டிரைலர் இதோ
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
Akhil Akkineni Engaged: நாக சைதன்யா திருமணத்திற்கு முன் இரண்டாவது மகன் அகிலுக்கு நிச்சயதார்த்தத்தை முடித்த நாகர்ஜுனா - அமலா!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இன்று இரவு 34 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Embed widget