ரயில் பயணிகளே உங்கள் கவனத்திற்கு.... ரயில் சேவைகளில் மாற்றம் செய்து இருக்காங்க!!!
திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: ரயில் பயணிகளே உங்கள் கவனத்திற்கு... திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த முழு விபரம் உங்களுக்காக!!!
தமிழகத்தில் ரயில் போக்குவரத்தில் மையப்புள்ளியாக திருச்சி விளங்குகிறது. மக்கள் அதிகம் விரும்பி பயணம் செய்வது ரயில்களில்தான். இந்நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை அதற்கேற்றார் போல் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்ல மக்கள் பெரும்பாலும் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறைந்த செலவில் பாதுகாப்பான பயணத்திற்கு ரயில் பயணமே பயணிகளின் முக்கிய தேர்வாக இருக்கிறது. முக்கியமாக வயதானவர்கள், குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள், குடும்பத்துடன் பயணம் செய்பவர்கள் என்று அனைத்து தரப்பினரும் மிகவும் விரும்புவது ரயில் பயணத்தைதான்.
பயணிகள் வசதிக்காக தென் மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், பாண்டியன் எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், தேஜஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. இதே போல சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வழியாகவும் தென் மாவட்டங்களுக்கு பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் எப்போதும் மக்கள் நெரிசல் இருந்து கொண்டே இருக்கும். அந்தளவிற்கு ரயில் பயணத்தை மக்கள் விரும்புகின்றனர்.
இந்நிலையில் பராமரிப்பு பணி மற்றும் பிற காரணங்களால் அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால், திருச்சி வழியாக இயக்கப்படும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் சேவை மாற்றத்தை பார்த்து தங்கள் பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருச்சி - காரைக்கால் டெமு ரெயில் (76820): காலை 8.35 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், ஆகஸ்ட் 4 முதல் 10 வரை திருச்சி - திருவாரூர் இடையே மட்டுமே இயங்கும். இதேபோல்ங ஈரோடு - திருச்சி பயணிகள் ரெயில் (56106): காலை 8.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் நாளை ஆகஸ்ட் 5 மற்றும் 9 தேதிகளில் ஈரோடு - திருச்சி கோட்டை வரை மட்டுமே இயங்கும். *காரைக்குடி - திருச்சி பயணிகள் ரெயில் (56832): காலை 9.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், நாளை ஆகஸ்ட் 5 மற்றும் 19 தேதிகளில் காரைக்குடி - குமாரமங்கலம் வரை மட்டுமே இயக்கப்படும்.
காரைக்கால் - திருச்சி டெமு ரெயில் (76819): இன்று 4ம் தேதி முதல் 10 வரை திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வந்தடையும். திருச்சி - பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் (16843): நாளை ஆகஸ்ட் 5 மற்றும் 19 தேதிகளில் திருச்சி கோட்டை நிலையத்தில் இருந்து மதியம் 1.12 மணிக்கு புறப்படும். திருச்சி - ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் (16849): வரும் 11ம் தேதி முதல் 14 வரை திருச்சி - மானாமதுரை இடையே மட்டுமே இயங்கும். ராமேசுவரம் - திருச்சி எக்ஸ்பிரஸ் (16850): வரும் 11ம் தேதி முதல் 14 வரை ராமேசுவரம் - மானாமதுரை இடையே சேவை ரத்து செய்யப்படும். மானாமதுரையில் இருந்து மாலை 4.55 மணிக்கு திருச்சிக்கு புறப்படும்.
மயிலாடுதுறை - செங்கோட்டை எக்ஸ்பிரஸ்: மதியம் 12.10 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்படும் இந்த ரெயில், வரும் 10ம் தேதி மற்றும் 13 தேதிகளில் வழக்கமான பாதையில் இயங்காமல், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவக்கோட்டை ரோடு, சிவகங்கை, மானாமதுரை, விருதுநகர் வழியாக செங்கோட்டைக்கு செல்லும். எனவே இந்த வழித்தடத்தில் பயணம் செய்யும் ரெயில்வே பயணிகள் தங்கள் பயண திட்டங்களை சரியான முறையில் அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.





















