மேலும் அறிய

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது - திருநாவுக்கரசு

இம்மாதம் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது - திருநாவுகரசர் எம்.பி. பேட்டி

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: நாடாளுமன்ற ராகுல்காந்தி  பேச்சு மோடி அரசை ஆட்டம் காண செய்துள்ளது. அம்பானி  குடும்பத்தினர் 260வது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்தது எப்படி என கேள்வி  எழுப்பினார். மேலும்  மோடியுடன் எங்கு சென்றார், எத்தனை ஆயிரம் கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து இடப்பட்டது. அதன் குழுமத்திற்கு நிதி உதவிக்காக தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகள் எல்ஐசி போன்ற பொதுமக்களுடைய பணம் எவ்வளவு தரப்பட்டுள்ளது என்ற கேள்விகள் கேட்டார். இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல முடியவில்லை பிரதமரோ, நிதி அமைச்சர் யாரும் பதில் சொல்லவில்லை.
இதனால் பாராளுமன்றத்தில் முடக்கினார். பாராளுமன்ற வரலாற்றில் பாஜக அமைச்சர்களே நாடாளுமன்றத்தை முடக்கினார்கள். இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதுமே முடக்கி எந்த விவாதம் நடத்தப்படவில்லை. அவர்கள் அதை சாதகமாக விவாதமின்றி  காரியங்கள் நிறைவேற்றி கொண்டார்கள். மேலும் (JPC) ஜாயின்ட் பார்லிமென்ட்ரி  கமிட்டி வேண்டும் என்று எதிர் கட்சிகளும் கேட்டனர். இதில் பாஜக கட்சியினர் தான் தலைவராக இருப்பார். உண்மை வெளிவரும் என்ற காரணத்தால் JPC போட பாஜக பயப்படுகிறது. ராகுல் காந்தி இந்தியாவுக்கு  விரோதமாக பேசினார் என்று சொல்லி, இரண்டு வருடத்திற்கு முன்பாக தேர்தலில் பேசியதை எடுத்து அவருக்கு சாதகமான மாஜிஸ்ட்ரேட்டை  போட்டனர்.  மேலும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்து இருக்கிறார்கள்.

ஆளுநர் என்பவர் மாநிலத்திற்கு துணையாக இருக்க வேண்டுமே தவிர தடையாக இருக்கக் கூடாது - திருநாவுக்கரசு

மேலும் அவருடைய ஜனநாயக கடமைக்கு  எதிரான செயல்களில் ஏற்படுத்துகிறது, மட்டுமல்ல எதிர்க்கட்சியில் ஜனநாயகக் குறவளையை ஒடுக்குவதாக உள்ளது. ராகுல் காந்தியின் பிரச்சனையில் சட்டப் பிரச்சனை சட்டரீதியாக சந்திப்போம், அரசியல் ரீதியாக நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அரசியல் ரீதியாக சந்திப்போம். ராகுல் காந்தி மீது தொடுக்கப்பட்ட ஜனநாயக படுகொலையை சட்ட எதிரான நடவடிக்கை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். நாளை மறுநாள் திமுக சார்பில் ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஈடுபடபோகிறது.  அதில் காங்கிரசும் ஈடுபட உள்ளது. மேலும் 15 ஆம் தேதி இந்தியா முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் எனது தலைமையில் போராட்டம் நடைபெற உள்ளது என்றார். 20ம் தேதி  மத்திய அரசு அலுவலகம் முன்பாக  இந்தியா முழுவதும் ஆர்ப்பாட்டம். இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் ஒன்றிய,  மாவட்ட அளவில் நடைபெற உள்ளது. ஏழு ஆண்டுகளாக கிடைப்பில் போடபட்ட அரிஸ்டோ மேம்பாலம்  தற்பொழுது  பணிகள் நிறைவு பெற்றுள்ளது. விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.

திருச்சியில் தொழில்நுட்ப பூங்கா வேண்டும் என முதலமைச்சரிடம் சென்ற ஆண்டு கோரிக்கை வைத்துள்ளோம். நம்பிக்கை அதிகரிக்கும் வகையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 600 கோடியில் திருச்சியில் டைட்டல் பார்க் ஆரம்பிக்கப்பட உள்ளது. பிரதமர் இந்தியா முழுவதும் போகும்போது அதை எதிர்த்து போராடுவது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆர்ப்பாட்டமும் நடத்துவது எங்களது கடமை. முதலமைச்சர் சட்ட ரீதியாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது அரசாங்கத்தின் கடமை, எங்கள் கடமை நாங்கள் செய்தோம் அரசு கடமையை அவர்கள் செய்தார்கள். இந்தியாவில் பல கட்சிகள் இருந்தாலும் பாஜக எதிராக  காங்கிரஸ் கட்சி தான் நேரடியாக சிம்ம சொப்பனமாக இருக்கிறது. ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் ஆகையால் தான்  நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு மாநில முதலமைச்சர், காங்கிரஸ் இல்லாமல் கூட்டணி அமைப்பது  கூட்டணிக்கு உதவாது என கூறி வருகின்றனர். ஒரு மாநிலத்தில் தேர்வு நடக்கும் போது அந்த மாநில மொழியில் தேர்வு எழுதக்கூடிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அப்போது அந்த மாநிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டாகும். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றும் பொழுது சட்ட பிரச்சனை ஆராய்ந்து தான் அனுப்புவார்கள். ஆனால் ஆளுநர் முதல் கட்டத்திலேயே தடுத்து வைப்பது முறை அல்ல. ஆளுநர் மாநிலத்திற்கு துணையாய் இருக்க வேண்டும் தடையாக இருக்கக் கூடாது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
'இந்திய அரசமைப்பும் தேசிய கீதமும் தமிழக சட்டப்பேரவையில் அவமதிப்பு’ ஆளுநர் பரபரப்பு குற்றச்சாட்டு..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
உரையை வாசிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
TN Assembly Session LIVE: அரசியலமைப்பிற்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுகிறார் - அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
ADMK: யார் அந்த சார்? சட்டசபைக்குள் சட்டைப் போராட்டம்! ஆட்டத்தை தொடங்கிய அ.தி.மு.க.!
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
Gangai amaran : கங்கை அமரனுக்கு என்ன ஆச்சு! திடீரென மருத்துவமனையில் அனுமதி... அதிர்ச்சியில் திரையுலகம்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
Embed widget