மேலும் அறிய

அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை

அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் விவசாய நிலத்தை வெள்ளம் சூழ்ந்ததில் நெற்பயிர்கள் மூழ்கின. விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தில் தொடர்ந்து தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டதால், பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கபட்டது. இதனை தொடர்ந்து  அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர், அரங்கோட்டை, அணைக்குடி போன்ற கிராமங்கள் கொள்ளிடம் ஆற்றையொட்டி அமைந்துள்ளன. தற்போது மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் தண்ணீர் தொட்டுச்செல்கிறது. மேலும் இப்பகுதியில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விளை நிலங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக முத்துவாஞ்சேரி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றில் செல்லும் தண்ணீர் அதனை வடிகாலில் இணைக்கும் மருதையாற்றின் வழியாக புகுந்து தாழ்வான கரைப்பகுதிகளில் வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்துள்ளது. இதனால் அங்குள்ள விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கின. மேலும் இந்த வழியாக சாத்தம்பாடி, கோவிந்தபுத்தூர் வரை நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரிலான விவசாய நிலங்களின் வழியாக தண்ணீர் செல்கிறது. இதனால் அங்கு பயிர் செய்யப்பட்டுள்ள சூரியகாந்தி, பருத்தி, நெற்பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. அரங்கோட்டை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தின் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை

மேலும்  நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. மேற்கண்ட கிராமங்களில் மொத்தம் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிர் செய்யப்பட்டுள்ள நெல், சூரியகாந்தி, பருத்தி போன்ற பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் 200-க்கும் மேற்பட்ட ஏக்கரில் அறுவடை செய்யும் நிலையில் இருந்த நெற்பயிர்களும் அடங்கும். இதனால் இப்பகு500 acres of agricultural land were floodedதி விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இப்பகுதிகளுக்கு வந்த மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம், சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகளை கொண்டு ஆய்வுசெய்து நீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இப்பகுதிகளில் தீயணைப்புத் துறையினர், போலீசார் மற்றும் மாவட்ட அதிகாரிகள் முகாமிட்டு இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுரை வழங்குவதோடு, போதிய எச்சரிக்கையும் செய்து வருகின்றனர். மேலும் பாதிக்கபட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் விவசாய நிலம் வெள்ளத்தில் மூழ்கியது - விவசாயிகள் வேதனை

இதேபோல் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள முத்துவாஞ்சேரி சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் 200 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள அந்த சித்திரை கார் பட்டம் நடவு நெல் வயல்கள் மற்றும் பருத்தி, சூரியகாந்தி பூ உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இது குறித்து அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளதாவது, மருதையாற்றில் கரை தாழ்வாக உள்ளதால் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மருதையாற்றில் நீர் எதிர்த்து வந்து முத்துவாஞ்சேரி சாத்தம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் புகுந்ததால் பயிர்களை சேதம் அடைந்துள்ளது. மேலும்  ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்பின் போது இந்த பகுதி வழியாக வெள்ளநீர் புகுந்து முத்துவாஞ்சேரி, சாத்தம்பாடி, அணைக்குடி, அறங்கோட்டை உள்ளிட்ட அருள்மொழி கிராமம் வரை பெரிய அளவில் விவசாய நிலங்கள் பாதிப்பு ஏற்படுகிறது. சென்ற ஆண்டு மழை காலங்களில் ஏற்பட்ட பாதிப்பின் போது அரசாங்கம் பயிர்களை கணக்கீடு செய்து சென்றதே தவிர விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவில்லை. தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள சித்தரைக்கார் நடவு பட்டம் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் சோகத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget