திருச்சி: மூட்டை மூட்டையாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி! 3400 கிலோவை பறிமுதல் செய்த அதிகாரிகள்!
திருச்சி மாவட்டத்தில் 85 மூட்டைகளில் பதிக்கு வைத்திருந்த 3400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் - மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி பதுக்கல் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சி புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கடத்தல் சம்பவம் நடைபெற்று வருவதாக பொதுமக்கள புகார் தெரிவித்து வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் புகார் மீது உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளில திருச்சி மத்திய மண்டலத்தில் ரேஷன் அரிசி பதுக்கல், கடத்தல் சம்பவம் அதிகரித்து உள்ளதாக தகவல் தெரிவிக்கபட்டுள்ளது.
இதனால் திருச்சி மத்திய மண்டலத்தில் முழுவதும் அதிகாரிகள் தனிப்படைகள் அமைத்து தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் வகையில் தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் பல இடங்களில் அதிரடி சோதனையை ல்மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக திருச்சி மண்டலத்தில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் திருச்சி, கரூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூா் ஆகிய மாவட்டங்களில், அத்தியாவசிய பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ரேஷன் அரிசியை கடத்தினால் கடுமையான நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்
இந்நிலையில் திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், நேரு தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று திருச்சி கிழக்கு உணவு பொருள் வழங்கல் தனி தாசில்தார் சத்தியபாமா மற்றும் திருச்சி கிழக்கு வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோருடன் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் இனஸ்பெக்டர் ஆகியோர் இணைந்து விசாரணை மேற்கொண்டனர்.
உடனடியாக அதிகாரிகள் ரேஷன் அரசி பதுக்கி வைத்து இருந்த இடத்திற்கு சென்று பார்த்த போது சுமார் 40 கிலோ எடை கொண்ட 85 மூட்டைகளில் 3400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரித்த போது, மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ஹக்கீம் மகன் அன்வர் பாட்ஷா என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அன்வர் பாட்சாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
மேலும், திருச்சி மாவட்ட அதிகாரிகள் கூறும்போது, ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய புதிதாக குழுமைக்கபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
மேலும் ரேஷன் அரிசி மற்றும் அதனுடன் வழங்கபடும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்து ஏழை, எளிய மக்களுக்கு அரசாங்கள் வழங்குகிறது.
இதனை சட்டத்திற்கு புறம்பாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தாலோ அல்லது கடத்தலில் ஈடுபட்ட கூடாது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் ரேஷன் அரிசியை பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.