மேலும் அறிய

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்ததில் 3 பேர் பலி..

திருச்சி அருகே சமயபுரம் கோயிலுக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலியே பலி..

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு மாலையிட்டு விரதமிருந்து பாத யாத்திரையாக வருடந்தோறும் செல்வது வழக்கம். இந்த ஆண்டும் விரதமிருந்த பக்தர்கள் நேற்று மாலை அய்யலூரில் இருந்து கலர்பட்டியைச் சேர்ந்த பிச்சை என்பவர் தலைமையில் புறப்பட்டனர். ஒவ்வொரு குழுக்களாகப் பிரிந்து பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர். வழியில் பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்டவைகளை வழங்குவதற்காக வாகனம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஒரு குழுவை சேர்ந்தவர்கள் சுமார் 10-க்கும் மேற்பட்டோர் இன்று அதிகாலையில் திண்டுக்கல்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறை அடுத்த இடையபட்டியான்பட்டி என்ற இடத்தின் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மணப்பாறை நோக்கி தக்காளி ஏற்றிக் கொண்டு மின்னல் வேகத்தில் வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்ததில் 3 பேர் பலி..

இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 7 பக்தர்கள் படுகாயமடைந்து சாலையில் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய வேனை டிரைவர் மணப்பாறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று நிறுத்தினார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சீகம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (24), எரியோடு எம்.ஜி.ஆர்.நகர் பகுதியைச் சேர்ந்த சேகர் (40), ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த ரம்யா (34), முத்துப்பாண்டி (34), மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மணப்பாறை மற்றும் திருச்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இறந்தவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் படுகாயமடைந்த 4 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருச்சி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் கூட்டத்தில் வேன் புகுந்ததில் 3 பேர் பலி..

விபத்து குறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 3 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து தகவல் அறிந்து சென்ற திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமார் விசாரணை நடத்தினார். மேலும், அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயபுரம் பாதயாத்திரை பக்தர்களுக்கு பாதுகாப்பாக செல்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் பாதயாத்திரை பக்தர்களின் உடமைகளில் ரிப்ளைட்டிங் ஸ்டிக்கர் ஒட்டினார். இது போல மணப்பாறையை கடந்து செல்லும் அனைத்து வாகன டிரைவர்களுக்கும், சமயபுரம் பக்தர்கள் பாதயாத்திரை செல்வதை எடுத்து கூறி, கவனமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்Tejasvi Surya marriage : தமிழக மருமகனாகும் தேஜஸ்வி?மோடி பாராட்டிய பாடகி! யார் இந்த சிவஸ்ரீ? : Sivasri”இனி ஜெயிலுக்கு வரமாட்டோம்” உறுதிமொழி எடுத்த கைதிகள்! | Salem Prisoners new year

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
இந்தியர்களின் கனவை நனவாக்கிய மனு பாக்கர், குகேஷ்க்கு கேல் ரத்னா விருது அறிவிப்பு!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Anbil Mahesh: அரசுப் பள்ளிகள் எங்களின் பிள்ளைகள்; தாரை வார்க்கமாட்டோம்- அமைச்சர் அன்பில் உருக்கம்!
Minister Moorthy speech: ’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
’’நான் பொதுவானவன்; அது அப்போ பேசினது’’ ஆண்ட பரம்பரை பேச்சு பற்றி அமைச்சர் மூர்த்தி விளக்கம்!
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Beau Webster : இந்தியாவின் புதிய தலைவலி.. கேரி சோபர்ஸ் சாதனையை முறியடித்த ஆல் ரவுண்டர்! யார் இந்த பியூ வெப்ஸ்டர்?
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market: ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை; 1,000 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்!
UGC NET 2024: உதவித்தொகை, பிஎச்.டி. சேர்க்கை; யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?
UGC NET 2024: உதவித்தொகை, பிஎச்.டி. சேர்க்கை; யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி! எப்படி?
Maruti Suzuki Sales: ஆத்தி..! ஒரே மாதத்தில் 30,000 யூனிட்களா? விற்பனையில் இதுவரை இல்லாத உச்சம், எந்த மாருதி கார் தெரியுமா?
Maruti Suzuki Sales: ஆத்தி..! ஒரே மாதத்தில் 30,000 யூனிட்களா? விற்பனையில் இதுவரை இல்லாத உச்சம், எந்த மாருதி கார் தெரியுமா?
அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!
அரசுப்பள்ளிகளை தத்தெடுக்கிறோமா? பெருந்தன்மையை கொச்சைப்‌படுத்துவதா? தனியார் பள்ளிகள் சங்கம் கேள்வி!
Embed widget