மேலும் அறிய

திருச்சியில் இருந்து வார விடுமுறையை ஒட்டி 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வார விடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக 500 சிறப்பு பஸ்கள் இயக்கம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் லிட் மேலாண் இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிட் சார்பில் சனி, ஞாயிறு வாரவிடுமுறையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக திருச்சி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கும் 150 பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருச்சியில் இருந்து கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய இடங்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கும் 100 பஸ்கள் என கூடுதலாக இந்த வார விடுமுறையை முன்னிட்டு மொத்தம் 250 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

திருச்சியில் இருந்து வார விடுமுறையை ஒட்டி 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

இதேபோன்று மேற்படி விடுமுறைக்கு வந்த பயணிகள் மீண்டும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப 24-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளில் (ஞாயிறு, திங்கட்கிழமை) சென்னை தடத்தில் 150 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விடுமுறை முடிந்து பயணிகள் திரும்பச்செல்ல 24, 25-ந் தேதிகளில் திருச்சியில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், அரியலூரில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களில் இருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும், பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து வார விடுமுறையை ஒட்டி 200 சிறப்பு பஸ்கள் இயக்கம்

மேலும் 23, 24-ந் தேதிகளில் விடுமுறை காரணமாக பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக பயணிகள் முன்னதாகவே முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு, பயணிப்பவர்களின் தேவைக்கேற்ப போக்குவரத்துக் கழகங்களை கணித்து அதற்கேற்ப பஸ்களின் சேவையை அளிக்க ஏதுவாகும். அனைத்து போக்குவரத்துக் கழகங்களிலும் முக்கிய நகரங்களுக்கு இடையே இயக்கப்படும் பஸ்களும் முன்பதிவு சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே பயணிகள் www.tnstc.in இணைய முகவரி மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும். மேலும், முக்கிய பஸ் நிலையங்களில் சிறப்பு அலுவலர்கள், பரிசோதகர்கள், பணியாளர்கள், பயணிகள் வசதிக்காக பணியமர்த்தப்பட்டு பஸ்களின் இயக்கத்தை சீரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்தி குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
“வாஜ்பாய்க்கு பெரிய மனது, சோனியாவுக்கு அது இல்லை” போட்டு உடைத்த முன்னாள் மத்திய அமைச்சர்..!
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
TN Rains: ஃபெஞ்சலால் பெய்த பேய்மழை! வெள்ளத்தில் மிதக்கும் தமிழகம் - எப்போதான் வடியும் தண்ணீர்?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
Schools Colleges Holiday: பசங்களா..! விடாத கனமழை, மொத்தமாக 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை - எங்கெல்லாம் தெரியுமா?
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
அய்யம்பேட்டையில் சோகம்... வீட்டை இடிக்கும்போது சிலாப் விழுந்து 2 பேர் பலி
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Expensive Passport: இவ்வளவு காசு கட்டணுமா..! உலகின் விலையுயர்ந்த பாஸ்போர்ட் எது? லிஸ்டில் இந்தியாவிற்கு எந்த இடம்?
Rashmika Mandana:
Rashmika Mandana: "தேசிய விருது கன்ஃபார்ம்" அடித்துச் சொல்லும் புஷ்பா நாயகி ராஷ்மிகா மந்தனா!
Embed widget