இன்றைய தலைப்புச் செய்திகள் - 30.03.2021
தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது - திமுக தலைவர் ஸ்டாலின்
தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததும் சட்டஒழுங்கு இரும்புக்கரம் கொண்டு பாதுகாக்கப்படும் - திமுக தலைவர் ஸ்டாலின்
திமுகவினரின் ஆட்சியில் தான் அதிக அளவில் படுகொலைகள் நடந்தது, திமுக ஆட்சியில் சட்டஒழுங்கு பிரச்சனையும் அதிகரிக்கும் - டி.டி.வி. தினகரன்.
திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே ஊழல் நிறைந்த காட்சிகள், ஊழல் செய்தவர்களை உருவாக்கியது யார்.? - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.
தாராபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பழனிசாமி இன்று ஒரே மேடையில் பிரச்சாரம். புதுவையிலும் இன்று மாலை பிரதமர் மோடி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
புதுச்சேரியில் 144 தடையுத்தரவு போட்டுவிட்டு பிரதமர் புதுச்சேரி செல்வது ஆச்சர்யமாக உள்ளது. இது அடக்குமுறையை கையாளும் கொடுங்கோல் ஆட்சி - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் முக்கியம்மல்ல, அரசியல் மாற்றம் தான் மிகவும் முக்கியம் - நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
புதுக்கோட்டை அருகே கந்தர்வகோட்டையில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா. தேர்தல் பறக்கும்படையினரிடம் சிக்கிய அதிமுகவினர், 52,000 ரூபாய் ரொக்கம் பறிமுதல்.
ஆத்தூர் தொகுதியில் பா.ம.க பெண் வேட்பாளரை பிரச்சாரம் செய்யவிடாமல் திமுக பிரமுகர் மிரட்டல். தோல்வி பயத்தால் திமுக இப்படி செய்யவதாக பா.ம.க பெண் வேட்பாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் மொதம் 88497 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு.
கன்னியாகுமரியில் உள்ள மனநல காப்பகத்தில் 40-க்கும் அதிகமானோருக்கு கொரோனா. நாகர்கோயில் அரசு மருத்துவமனையில் அனுமதி.
டெல்லியில் கடந்த 76 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் வெப்பம், 40.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது - இந்திய வானிலை மையம்.