11.04.2021 நாளுக்கான தலைப்புச் செய்திகள்
தமிழகத்தில் ஆறாயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1977 பேர் பாதிப்பு.
சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மக்கள் சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் கடற்கரையில் கூட தடை.
அனைத்து வழிபாட்டுத்தளங்களில் இரவு 10 மணி வரை வழிபாடு நடத்த அனுமதி. திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த தடை.
தமிழகத்தில் ஆறாயிரத்தை நெருங்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை. சென்னையில் நேற்று ஒரே நாளில் 1977 பேர் பாதிப்பு.
பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ சத்திய பன்னீர்செல்வம் உள்பட 6 பேர் கட்சியில் இருந்து நீக்கம். தேர்தல் நேரத்தில் அதிமுக வேட்பாளருக்கு எதிராக செயல்பட்டதாக அறிவிப்பு.
தோல்வி பயத்தால் மம்தா கலவரத்தை தூண்டுகிறார், கடும் விரக்தியில் இருப்பதால் வாக்காளர்களை இழிவுபடுத்துகிறார் - பிரதமர் மோடி பேச்சு.
மத்திய அரசு கொரோனா தொற்று பரவலை மிகவும் மோசமாக கையாண்டு வருகின்றது - காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றச்சாட்டு.
பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட 8 நகரங்களில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
மஹாராஷ்டிராவில் வார இறுதியான சனி மற்றும் ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு அமல் - வெறிச்சோடிய சாலைகள்.
உலகின் முன்னணி மின்னணுவர்த்தக நிறுவனமான அலிபாபாவுக்கு 20,000 கோடி அபராதம் - போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சித்ததால் சீன அரசு அதிரடி.
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு மலை தொடரும் - வானிலை ஆய்வு
மையம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி.