ABP EXCLUSIVE: விஜய் 'சின்ன பையன்' அவரோடு சேர முடியாது... ஓபிஎஸ் தரப்பினர் பேசிய ஆடியோவில் பரபரப்பு தகவல்
ஓ.பன்னீர்செல்வம் விஜயுடன் சேர முடியாது அவர் சின்ன பையன் என ஓபிஎஸ் ஆதரவாளர் சையதுகான் தெரிவித்தார்.

“விஜய் சின்ன பையன்” இரண்டு முறை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவரோடு சேர முடியாது என ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர் சையத்கான் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் இன்றைய பரபரப்பான செய்தி என்றால் அதிமுகவின் முக்கிய தலைவராகவும், ஜெயலலிதாவின் விசுவாசியாகவும் அறியப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததுதான். ஓபிஎஸ் திமுகவின் இணையப்போகிறார் என்று சில நாட்களாகவே அரசல் புரசலாக பேசப்பட்டு வந்தநிலையில், தற்போது அது இன்று உண்மையானது. அவர் திமுகவில் இணையமாட்டார் என்று ஒருபுறமும், அவருக்கு திமுகவை விட்டால் தற்போது வேறவாய்ப்பில்லை என்று மற்றொரு புறமும் பேசப்பட்டது. ஆனால், கடைசியில் திமுகவில் இணைந்து தீவிர அதிமுகவினருக்கும் அதிர்ச்சியையும், திமுகவினருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததற்கு திமுகவினர் வரவேற்பையும், அதிமுகவினர் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைவார் என்று அவரின் தீவிர ஆதரவாளர் சையதுகான் ஏபிபி நாடுவிடம் உறுதியாக சொன்னார். அவர் கூறிய சில மணி நேரங்களில் ஓபிஎஸ் திமுகவில் இணைந்தார். அதற்கு முன்னதாக ஏபிபி நாடு செய்தியாளர், ஓபிஎஸ் திமுகவில் இணைவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு, ஓபிஎஸ் இரண்டு முறை முதலமைச்சராக இருந்தவர் என்றும் அரசியலை விட்டு ஒதுங்க முடியாது என்றும் கூறினார். மேலும், விஜயுடன் சேர முடியாது, சின்ன பையன் என்றும் பாஜக மதவாத கட்சி என்றும் தெரிவித்த அவர், வேற என்ன செய்ய முடியும் என்று ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததற்கான காரணத்தை கூறினார்.
OPS Joins DMK | "OPS முதலமைச்சரா இருந்தவர் விஜய் சின்ன பையன் அவரோட சேர முடியாது" ABP Nadu Exclusive https://t.co/wupaoCzH82 | #ops #dmk #seyedkhan #opanneerselvam #mkstalin #sekarbabu #tamilnews #abpnadu pic.twitter.com/d9r4ZnuKRz
— ABP Nadu (@abpnadu) February 27, 2026






















