(Source: ECI/ABP News/ABP Majha)
அதிமுக , திமுக மாறி மாறி கொள்ளையடிக்கிறார்கள். இதை நான் கேட்டால் என்னை பகையாளியாக பார்க்கிறார்கள் - அண்ணாமலை
தமிழகத்தில் மும்மொழி கொள்கை விட-ஐந்து மொழி கொள்கை நிச்சயம் கொண்டுவரப்படும் - அண்ணாமலை
என் மண் என் மக்கள் நடைபயணத்தின் ஒரு பகுதியாக இன்று திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் தனது நடை பயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கினார். ஆஞ்சநேயர் கோயிலுக்கு முன்பாக இன்று மாலை தனது நடை பயணத்தை துவக்கிய தலைவர் அண்ணாமலை 1000-க்கும் மேற்பட்ட தொண்டர்களுடன் போளூர் பேருந்து நிலையம் வரை பயணம் மேற்கொண்டார். இதில் வடக்கு மாவட்ட தலைவர் சி.ஏழுமலை, பெருங்கோட்ட பொறுப்பாளர் கார்த்திகாயினி புதிய நிதி கட்சித் தலைவர் ஏசி.சண்முகம் உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
போளூர் சட்டமன்ற தொகுதியும் மற்றும் ஆரணி சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு பிரச்சாரமாக வந்துள்ளேன். திமுக ஆட்சி எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை, ஏழை மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த ஒரு வளர்ச்சியையும் இல்லை, தமிழகத்தில் கடைசி ஐந்து இடங்களில் பெற்றுள்ள மாவட்டங்களில் அரியலூர்,பெரம்பலூர், தேனி,விழுப்புரம்,மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் என்றும் அதில் கடைசி இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் உள்ளது. திராவிட ஆட்சிகளில் தமிழகம் 70 ஆண்டுகளில் எந்த ஒரு வளர்ச்சியும் அடையவில்லை, தமிழகத்தில் காற்று மாசு அதிகரித்துள்ளதாகவும் கடைகோடி கிராமங்கள் இன்னும் முன்னேறவில்லை,
மத்திய அரசு அறிவித்த காலை உணவு திட்டத்தை தமிழக அரசு நாங்கள் கொட்டுவந்த திட்டம் என ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர்
பிரதமர் மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் இந்தியா முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும், வருகின்ற 2024 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக பாரத பிரதமர் மோடி பிரதமர் ஆக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் குடும்ப அரசியல் வேண்டாம், ஜாதி அரசியல் வேண்டாம் ,2024 ஆம் ஆண்டு ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் பணியாற்றக்கூடிய பொருத்தமான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்றும், தற்போதைய ஆரணி பாராளுமன்ற உறுப்பினராக உள்ள காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விஷ்ணு பிரசாத் தொகுதிக்கு எந்த நலத்திட்டங்களும் செய்ததும் இல்லை பாராளுமன்றத்தில் மக்களுக்கான பிரச்சினைகளை பற்றி பேசியதும் இல்லை, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை தமிழக அரசு ஸ்டிக்கரை ஒட்டி கொண்டு நாங்கள் செய்வது என்று தெரிவித்து வருகின்றனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தேசிய கொள்கை கல்வி திட்டத்தின் கீழ் மத்திய உணவு திட்டம் மற்றும் காலை உணவு திட்டத்தை கொண்டு வந்தார், அதை தமிழக அரசு தாங்கள் கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தை அதிமுக திமுக மாறி மாறி கொள்ளை அடிக்கிறார்கள்
2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைந்தால் அரசு வேலை இல்லாத வீட்டில் ஒருவருக்கு நிச்சயம் அரசு வேலை வழங்கப்படும் என அண்ணாமலை உறுதி அளித்தார். தமிழகத்தில் முன்மொழிக் கொள்கையை விட 5 மொழி கொள்கை நிச்சயம் கொண்டுவரப்படும். போளூர் தொகுதியில் இந்திரவணம் கிராமத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளது. தமிழகத்தில் எல்லாத்தொகுதிகளிலும் இதேநிலைதான். விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போட்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று பார்த்தால் அவருக்கு வேளாண்துறை இயக்குனர் பதவியை கொடுத்து அழகு பார்க்கிறது. இந்த அரசு தமிழகத்தில் முக்கியத்துறைகளில் பணியிடங்கள் காலியாக உள்ளது. தமிழகத்தில் அதிமுக 5 வருடங்கள் திமுக 5 வருடங்கள் என மாறி மாறி கொள்ளையடித்து கொண்டு இருக்கிறார்கள். இதை நான் கேட்டால் இருவரும் சேர்ந்து கொண்டு நங்கள் பங்காளிகள் என்று கூறி என்னை பகையாளியாக பார்க்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் நன்றாக வாழவேண்டும் என்றல் இங்குள்ள அரசியல் வாதிகளின் பேச்சை கேட்காதீர்கள் என பேசினார்.