மேலும் அறிய

Kanimozhi MP: "புத்தகங்கள் இருந்தால் ஒவ்வொரு நாளும் புது உலகம்" - கனிமொழி எம்.பி..!

பேரறிஞர் அண்ணா,தான் படித்த புத்தகத்தை படித்து முடித்த பின்பு அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் தெரிவிக்கும் அளவுக்கு அவர் வாசிப்பு பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 3-வது புத்தக திருவிழா தூத்துக்குடி ஏ.வி.எம். மகாலில் நடக்கிறது. இதன் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார்.அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, சண்முகையா எம்.எல்.ஏ, காவல்துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


Kanimozhi MP:

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசும்போது, உலகில் உள்ள அனைத்து விஷயங்களையும் உங்களுக்கு கொண்டு வந்து தரக்கூடியது புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம்தான். பேரறிஞர் அண்ணா, ஒரு வீட்டில் நூலகம் இல்லையென்றால் அதை வீடாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்வதில் இருந்தே புத்தகத்தின் முக்கியத்துவம் நமக்கு தெரிய வேண்டும். தான் படித்த புத்தகத்தை படித்து முடித்த பின்பு, அறுவை சிகிச்சை செய்யுமாறு மருத்துவரிடம் தெரிவிக்கும் அளவுக்கு அவர் வாசிப்பு பழக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.


Kanimozhi MP:

புத்தகங்கள் இருக்கும் பொழுது ஒவ்வொரு நாளும் என்னால் ஒரு புது உலகத்தில் வாழமுடியும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் புத்தகங்களை, எழுத்தாளர்களை, பத்திரிகையாளர்களை பார்த்து பயந்தார்கள். இதனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டன. புத்தகத்தை, எழுத்தாளனை, சிந்தனையாளனை இல்லாமல் செய்துவிட்டால் இந்த மக்களை நாம் அடிமையாகவே வைத்திருக்க முடியும் என்று அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் நினைத்தார்கள்.


Kanimozhi MP:

இதனால் நாம் புத்தகங்களின் வீரியத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு எழுத்தாளரின் சாதாரண வார்த்தை இந்த சமூகத்தை மாற்றக்கூடிய ஒன்றாக மாற முடியும். புத்தகங்களை தேடித் தேடி தனது சிந்தனையை செதுக்கிக் கொண்டவர்கள்தான் இந்த சமூகத்தில் உண்மையான தலைவர்களாக வந்திருக்கிறார்கள். எது நமதுஅடையாளம், எது நமது வரலாறு, எதை நாம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் நமக்கு சொல்லித்தரக் கூடியது புத்தகங்கள். அனைவரும் படிப்பதற்காக புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்றார்


Kanimozhi MP:

விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசும் போது, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவின்படி தமிழகம் முழுவதும் புத்தக திருவிழா நடந்து வருகிறது. புத்தகத்தின் முக்கியத்துவத்தை வருங்கால தலைவர்களாகிய இளைஞர்கள் அறிய வேண்டும்,  புத்தகங்கள் பதிப்பிக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற வேண்டும் என்பதற்காக திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும், முதல்-அமைச்சரின் முயற்சியால் புத்தக திருவிழா நடக்கிறது. ஜனவரி மாதத்தில் உலக அளவிலான புத்தக திருவிழா நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழர்கள் நல்ல அறிவாற்றல் பெற்ற சமுதாயமாக இருக்க வேண்டும், தங்களை நல்ல சிந்தனையாளர்களாக மாற்ற வேண்டும், புத்தக வாசிப்பை ஊக்குவிப்பதற்காக புத்தக திருவிழா நடக்கிறது. புத்தகங்களை வாசிப்பதால் அறிவாற்றலை பெருக்கி கொள்ள முடியும் உங்களுக்கு பிடித்த புத்தகங்களை நீங்களே தேர்வு செய்து படிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. மீனவர் அணி சார்பில் உலக மீன்வள தினம் மற்றும் மீனவர் தினத்தை முன்னிட்டு படகு போட்டி நடத்தப்பட்டது. தூத்துக்குடி முத்து நகர் கடற்கரையில் நடந்த படகு போட்டிக்கு அமைச்சர் கீதாஜீவன் தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த போட்டியில் தூத்துக்குடியை சேர்ந்த 15 பைபர் படகுகளில் மீனவர்கள் ஆர்வமாக கலந்து கொண்டனர். போட்டி 7 கிலோ மீட்டர் தூரம் நடந்தது. போட்டி தொடங்கிய உடன் படகுகள் சீறிப்பாய்ந்தன. இந்த போட்டியில் திரேஸ்புரத்தை சேர்ந்த ராஜ் முதல் இடத்தையும், ராஜேஷ் 2-வது இடத்தையும், லிட்டில் 3-வது இடத்தையும் பிடித்தனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கனிமொழி எம்.பி கலந்து கொண்டு வெற்றி பெற்ற மீனவர்களுக்கு பரிசுகளையும், பங்கேற்ற அனைத்து மீனவர்களுக்கும் சிறப்பு பரிசுகளையும் வழங்கினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Krishna Jayanthi 2024: கோலாகலமாக தொடங்கியது கிருஷ்ண ஜெயந்தி! ராதை, கிருஷ்ணர் அவதாரம் எடுத்த குழந்தைகள்!
Krishna Jayanthi 2024: கோலாகலமாக தொடங்கியது கிருஷ்ண ஜெயந்தி! ராதை, கிருஷ்ணர் அவதாரம் எடுத்த குழந்தைகள்!
Palani :
Palani : "திமுக ஆட்சி காலம் தான் இந்து அறநிலைத்துறையின் பொற்காலம்" - உதயநிதி
Breaking News LIVE: தமிழக முதலமைச்சர் நாளை அமெரிக்க பயணம்
Breaking News LIVE: தமிழக முதலமைச்சர் நாளை அமெரிக்க பயணம்
Rasi Palan Today, August 26: மேஷத்துக்கு புகழ்தான்; ரிஷபம் காரியத்தை தள்ளிப்போடுவது நல்லது : உங்கள் ராசிக்கான பலன்?
மேஷத்துக்கு புகழ்தான்; ரிஷபம் காரியத்தை தள்ளிப்போடுவது நல்லது : உங்கள் ராசிக்கான பலன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annnamalai slams DMK | ”அன்றும்... இன்றும்முருகன் பார்க்குறாரு” விளாசும் அண்ணாமலைDMDK Cadre | விஜயகாந்த் பிறந்தநாளில் உயிரிழந்த தேமுதிக நிர்வாகி.. கடலூரில் சோகம்Rahul Gandhi on caste census | ”MISS INDIA-ல் அதிர்ச்சி! ஒரு தலித் கூட இல்ல” ராகுல் வேதனைNagarjuna convention demolition | தரைமட்டமான மண்டபம்! சோகத்தில் நாகர்ஜூனா! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Krishna Jayanthi 2024: கோலாகலமாக தொடங்கியது கிருஷ்ண ஜெயந்தி! ராதை, கிருஷ்ணர் அவதாரம் எடுத்த குழந்தைகள்!
Krishna Jayanthi 2024: கோலாகலமாக தொடங்கியது கிருஷ்ண ஜெயந்தி! ராதை, கிருஷ்ணர் அவதாரம் எடுத்த குழந்தைகள்!
Palani :
Palani : "திமுக ஆட்சி காலம் தான் இந்து அறநிலைத்துறையின் பொற்காலம்" - உதயநிதி
Breaking News LIVE: தமிழக முதலமைச்சர் நாளை அமெரிக்க பயணம்
Breaking News LIVE: தமிழக முதலமைச்சர் நாளை அமெரிக்க பயணம்
Rasi Palan Today, August 26: மேஷத்துக்கு புகழ்தான்; ரிஷபம் காரியத்தை தள்ளிப்போடுவது நல்லது : உங்கள் ராசிக்கான பலன்?
மேஷத்துக்கு புகழ்தான்; ரிஷபம் காரியத்தை தள்ளிப்போடுவது நல்லது : உங்கள் ராசிக்கான பலன்?
Siragadikka Aasai August 26 : ரோகிணி வீட்ல மாட்டிக்க போற நேரம் வந்தாச்சு... பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை
ரோகிணி வீட்ல மாட்டிக்க போற நேரம் வந்தாச்சு... பரபரப்பான கட்டத்தில் சிறகடிக்க ஆசை
Today Panchangam: இன்று திங்கள் கிழமை! பஞ்சாங்கம் சொல்லும் சுபகாரியத்திற்கான நல்ல நேரம் என்ன?
Panchangam: இன்று திங்கள் கிழமை! பஞ்சாங்கம் சொல்லும் சுபகாரியத்திற்கான நல்ல நேரம் என்ன?
Mann Ki Baat: நீங்க கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்: உரிமையுடன் கேட்ட பிரதமர் மோடி!.. அடடே..!
Mann Ki Baat: நீங்க கண்டிப்பாக அரசியலுக்கு வரணும்: உரிமையுடன் கேட்ட பிரதமர் மோடி!.. அடடே..!
அடிச்சது ஜாக்பாட்.. இந்த பங்கு உங்க கிட்ட இருக்க.. அடுத்த வாரம் கொட்டப்போகும் பணமழை!
அடிச்சது ஜாக்பாட்.. இந்த பங்கு உங்க கிட்ட இருக்க.. அடுத்த வாரம் கொட்டப்போகும் பணமழை!
Embed widget