மேலும் அறிய

ஹைட்ரஜன் உற்பத்தி ஹப்பாக மாறுகிறதா தூத்துக்குடி? - ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

கார்பன் உமிழ்வைக் குறைக்க பசுமை எரிபொருள் உருவாக்கத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ஹைட்ரஜன் உற்பத்தி ஹப்பாக மாறுகிறதா தூத்துக்குடி? - ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இதுகுறித்து துறைமுக ஆணையம் வெளிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "மத்திய கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிபோக்கு அமைச்சகம் சார்பில் சர்வதேச உலகளாகிய கடல்சார் இந்திய உச்சி மாநாடு மும்பையில் நடந்தது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

ஹைட்ரஜன் உற்பத்தி ஹப்பாக மாறுகிறதா தூத்துக்குடி? - ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

தொடர்ந்து தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.434.17 கோடி திட்ட மதிப்பில் 9-வது சரக்கு தளத்தை சரக்கு பெட்டக முனையமாக மாற்றும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த சரக்கு பெட்டக முனையமானது 370 மீட்டர் நீளமும், 6 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டதாகவும், 8 ஆயிரம் சரக்கு பெட்டகம் கொள்ளளவு கொண்ட சரக்கு பெட்டக கப்பலை கையாளும் வசதி கொண்டதாகவும் இருக்கும்.

ஹைட்ரஜன் உற்பத்தி ஹப்பாக மாறுகிறதா தூத்துக்குடி? - ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

மேலும் வ.உ.சி துறைமுகத்தில் ரூ.26.70 கோடி திட்ட மதிப்பில் 5 மெகாவாட் சூரிய மின்னாலை மற்றும் ரூ.18.38 கோடி திட்ட மதிப்பில் 2 மெகாவாட் காற்றாலையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதன் மூலம் துறைமுகத்துக்கு தேவையான அனைத்து எரிசக்தியும் துறைமுகத்தின் மூலமே தயாரிக்கப்பட்டு உபயோகிக்கப்படும். மேலும் வ.உ.சி. துறைமுகம் இந்தியாவின் முதல் பசுமை துறைமுகமாக மாறும்.

ஹைட்ரஜன் உற்பத்தி ஹப்பாக மாறுகிறதா தூத்துக்குடி? - ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

இந்த உச்சி மாநாட்டின் போது, பல்வேறு நிறுவனங்கள் சார்பில் துறைமுகத்தில் முதலீடு செய்வதற்கு சுமார் ரூ.2 லட்சம் கோடி திட்ட மதிப்பில் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதில் முக்கியமாக பசுமை ஹைட்ரஜன் மையம், தரைதள காற்றாலை, பயணிகள் கப்பல் சேவை மற்றும் துறைமுக பயன்பாட்டுக்காக பசுமை இழுவை கப்பல் போன்ற திட்டங்களுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன. இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தமிழ்நாடு குறித்த சிறப்பு கலந்துரையாடலில் தமிழக பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அரசு கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு பேசினர். மாநாட்டில் அமைக்கப்பட்டு இருந்த அரங்குகளில் வ.உ.சி. துறைமுக ஆணையம் நடுத்தர அளவிலான அரங்கு பிரிவில் சிறந்த அரங்கத்துக்கான 2-ம் இடத்தை வென்றது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹைட்ரஜன் உற்பத்தி ஹப்பாக மாறுகிறதா தூத்துக்குடி? - ரூ.1 லட்சம் கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கென்று கட்டமைப்பை உருவாக்க தமிழ்நாடு, குஜராத், ஒடிசாவில் மூன்று துறைமுகங்களை அடையாளம் கண்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்க பசுமை எரிபொருள் உருவாக்கத்தில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், 2030-க்குள் ஆண்டுதோறும் 50 லட்சம் டன் பசுமைஹைட்ரஜன், பசுமை அமோனியா, பசுமை மெத்தனால் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்கும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. இவற்றை ஏற்றுமதி செய்வதற்கு ஏற்ற துறைமுகங்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில், தூத்துக்குடி, காண்ட்லா, பாரதீப் ஆகிய இடங்களில் உள்ள மூன்று துறைமுகங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
RCB vs DC LIVE Score: அடுத்தடுத்து விக்கெட்..அசத்தும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
CSK vs RR Match Highlights: வீழ்த்தப்பட்ட ராஜஸ்தான்; CSK-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு பிரகாசம்!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget