மேலும் அறிய

நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் MP சீட்டா? பாஜக படுதோல்வியை சந்திக்கும் - நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி எம்பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை பாஜக நிறுத்த வேண்டும். இல்லையேல் படுதோல்வியை பாஜக சந்திக்கும்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்காக அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பணிகளில்  தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக தேர்தல் காரியாலயம் திறப்பது, வேட்பாளர்களை அறிவிப்பது என தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் துவக்கியுள்ளது. குறிப்பாக ஆளும் மாநில, மத்திய அரசுகள் அதிக முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி நெல்லையில் பாஜக சார்பில் தேர்தல் பணிகள் மிக விரைவாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலகத்தை பாஜக சட்டமன்ற குழு தலைவரும், திருநெல்வேலி தொகுதி எம்எல்ஏவுமான நயினார் நாகேந்திரன் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியா என கேட்டதற்கு கட்சி அறிவிக்கும் என தெரிவித்தார். கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் தேதி என எதுவுமே அறிவிக்கப்படாத நிலையில் அவர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தது நாடாளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில்  நயினார் நாகேந்திரன் போட்டியிட விரும்புவதாக கூறப்பட்டது. 

மேலும் பாஜக தலைமையும் இவருக்கு தான் திருநெல்வேலியில் வாய்ப்பு கொடுக்கும் எனவும் சொல்லப்பட்டது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலிலும் கட்சி தலைமை வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே தாமாக முந்திக் கொண்டு  நல்ல நாள் பார்த்து வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது நம்பிக்கைபடியே கட்சி அவருக்கு வாய்ப்பும் கொடுத்தது. எனவே இந்த முறையும் எப்படியும் தனக்கு எம்பி சீட் கிடைத்து விடும் என்பதில் நயினார் நாகேந்திரன் உறுதியாக உள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற சூழலில் தற்போது நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்பி சீட் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் எஸ்.ராஜா சார்பில்  நெல்லை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அதில் புறக்கணிக்காதே! புறக்கணிக்காதே! வெள்ளாளர்களை புறக்கணிக்காதே!  பெரும்பான்மையாக வாழ்கின்ற வெள்ளாளர்களை பாஜக புறக்கணிக்கிறதா? எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு மீண்டும் எம்பி சீட்டா? வெள்ளாளர்களே விழித்துக்கொள். திருநெல்வேலி எம்பி தொகுதியில் எங்கள் சமூக வேட்பாளரை பாஜக நிறுத்த வேண்டும். இல்லையேல் படுதோல்வியை பாஜக சந்திக்கும். எச்சரிக்கிறோம்....! என குறிப்பிட்டுள்ளார். சீட் கிடைக்கும் நம்பிக்கையில் தேர்தல் அலுவலகம் திறந்த சில நாளிலையே நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு கிளம்பியிருப்பது  நெல்லை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

வார்த்தையை விட்ட அண்ணாமலை! அதிருப்தியில் EPS! குழப்பத்தில் பாஜக சீனியர்கள்Rajendra Balaji Vs Mafoi Pandiarajan | மிரட்டிய ராஜேந்திர பாலாஜி!EPS-யிடம் போட்டு கொடுத்த மாஃபா தூதுவிடும் தவெக!Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
IND Vs Nz Final: ஐசிசியின் 6வது கோப்பை கிடைக்குமா? ஃபைனலில் இந்தியா - நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை - ரோகித் சாதிப்பாரா?
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
PM MODI: மோடி தேடி தேடி பிடித்த சி.எம்., இப்படி செய்யலாமா? சொன்னதை காதில் வாங்காமல் போட்ட அதிரடி உத்தரவு
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நாட்டிலேயே நாமதான் டாப்.. வாவ் சொல்ல வைக்கும் அரசு பேருந்துகள்.. விருதுகளை வாரிக்குவித்த தமிழ்நாடு!
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
நான் இந்தி இசையா? உயிரையும் கொடுப்பான் பாஜக தொண்டன் - தமிழிசை ஆவேசம்
"அய்யோ மாட்டிக்கிட்டோமே" சோதனை செய்த போலீஸ்.. வசமாக சிக்கிய கடத்தல்காரர்.. கடைசியில் ட்விஸ்ட்
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
Sun TV: டிஆர்பி ரேட்டிங்கில் அதளபாதாளத்தில் கிடக்கும் சன் டிவி சீரியல்கள் இதுதான்!
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
வாவ்… 118 கி.மீ... சென்னையில் மேலும் 3 வழித்தடம்! 128 மெட்ரோ நிலையங்கள்! வெளியான அதிரடி அறிவிப்பு
WhatsApp Admin Shot: அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
அடப் பாவிங்களா.! வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து தூக்கியதால் அட்மின் சுட்டுக்கொலை.. எங்கு தெரியுமா.?
Embed widget