மேலும் அறிய

நெல்லை மாணவர்கள் பலியான சம்பவம்: கைதானவர்களுக்கு டிச. 31 வரை நீதிமன்றக் காவல்!

'தலைமை ஆசிரியைக்கு விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதி; உடல்நலம் தேறியதும் திருநெல்வேலி கொக்கிரகுளம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு'

நெல்லை டவுண் சாப்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் நேற்று காலை இடைவேளையில்  மாணவர்கள் சிறுநீர் கழிக்க சென்ற போது கழிப்பறை தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர்கள் விஸ்வரஞ்சன் , சுதீஸ் மற்றும் அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்தனர் . மேலும் இந்த விபத்தில்  சஞ்சய், இசக்கிபிரகாஷ், சேக்அபுபக்கர்சித்திக் மற்றும் அப்துல்லா ஆகிய  4 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவர்களுக்கு தலா 10 லட்சமும் , காயம் அடைந்த மாணவர்களுக்கு 3 லட்சமும் அறிவித்தார் . இந்த உதவித் தொகையை உடனடியாக வழங்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு , போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் ஆட்சியர் விஷ்ணு , சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர், அங்கு இறந்த மாணவர்களின் உறவினர்கள் உடலை வாங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அவர்களிடம் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு , அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி  விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து உறவினர்கள் உடலை வாங்கி சென்றனர். பின்னர் சபாநாயகர் , அமைச்சர் , ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மூன்று மாணவர்களின் உடல்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி உறவினர்களிடம் 10 லட்சம் அரசின் நிவாரண உதவியையும் வழங்கினார் .  

நெல்லை மாணவர்கள் பலியான சம்பவம்: கைதானவர்களுக்கு டிச. 31 வரை நீதிமன்றக் காவல்!

மேலும் விபத்து குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளரி்களுக்கு அளித்த பேட்டியில்  நெல்லை பள்ளி விபத்து குறித்து தமிழக முதல்வர்  உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்லுமாறு தனக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இங்கு வந்துள்ளளேன் ,பள்ளி விபத்து குறித்து பள்ளி தாளாளர் சகாய செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசெல்வி மற்றம் கட்டிட ஒப்பந்தகார் ஜான்கென்னடி ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . விசாரணை நடந்து வருகிறது. மேலும் இதில் வேறுயாரும் சம்பந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் .இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது காயம் அடைந்த 4 பேருக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.. காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் . மேலும் கட்டிட தரம் குறித்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார் .

நெல்லை மாணவர்கள் பலியான சம்பவம்: கைதானவர்களுக்கு டிச. 31 வரை நீதிமன்றக் காவல்!

பள்ளிக்கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து சாப்படர் பள்ளிக்கு இன்றுமுதல் மறுஉத்தரவு வரும் பள்ளியை மூட பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது, மேலும் அப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் இந்த சம்பவத்திற்கு காரணம் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே என குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்,  

நெல்லை மாணவர்கள் பலியான சம்பவம்: கைதானவர்களுக்கு டிச. 31 வரை நீதிமன்றக் காவல்!

இந்த விபத்து தொடர்பாக பள்ளி தாளாளர் சாமுவேல் செல்வராஜ், பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்வி, மற்றும் கட்டிட ஒப்பந்தகாரர் ஜான் கென்னடி ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடந்து  வந்த நிலையில் பள்ளி தலைமை ஆசிரியை ஞான செல்விக்கு விசாரணையின் போது நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் பள்ளி தாளாளர் சாமுவேல் செல்வராஜ் மற்றும் ஒப்பந்ததாரர் ஜான் கென்னடி இருவரையும் போலீசார் பாளையங்கோட்டை நீதிபதிகள் குடியிருப்பிற்கு இன்று அதிகாலை அழைத்துச் சென்று  குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4 நீதிபதி ஜெய்கணேஷ் முன் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 31- ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் கிளை சிறைக்கு அழைத்து சென்று அங்கு சிறையில் அடைத்தனர். நெஞ்சுவலி காரணமாக நெல்லை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  தலைமை ஆசிரியை ஞான செல்வி யை நேரில் சென்று பார்வையிட்டு நீதிபதி  விசாரணை நடத்தி அவருக்கும் வரும் 31- ந்தேதி வரை  நீதிமன்ற காவலுக்கு உத்தரவிட்டார். சிகிச்சை முடிந்த பின்பு அவர் நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget