மேலும் அறிய

Kovilpatti: சர்வதேச விமான பயிற்சி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரிய டிட்கோ - மகிழ்ச்சியில் கோவில்பட்டி பொதுமக்கள்

இந்தியாவில் ஆண்டுதோறும் 1500 விமான ஓட்டிகள் தேவைப்படுகின்றனர். ஆனால் 600 பேர் தான் இந்தியாவில் இருந்து வருகின்றனர். மற்ற அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான்.

கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி பகுதியில் உள்ள விமான ஓடுதளத்தை விமான பயிற்சி மையத்துக்கு பயன்படுத்தப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், அப்போது தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். 

Kovilpatti: சர்வதேச விமான பயிற்சி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரிய டிட்கோ - மகிழ்ச்சியில் கோவில்பட்டி பொதுமக்கள்

தோணுகால் கிராமத்தில் மொட்டை மலை அடிவாரத்தில் 1.2 கிமீ நீளம் மற்றும் 15 மீட்டர் அகலத்தில் விமான ஓடுதளம் அமைந்துள்ளது. இது கோவையை சேர்ந்த லட்சுமி ஆலை நிர்வாகம் சார்பில் தங்களது தனி விமானத்தை இறக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அவர்கள் செஸ்னா வகை சிறிய ரக விமானத்தில் வந்து சென்றுள்ளனர். காலப்போக்கில் வேறு சிலரும் இந்த ஓடுதளத்தை பயன்படுத்தி உள்ளனர். நாலாட்டின்புதூர் மற்றும் தோணுகால் ஆகிய இரு கிராமங்களில் 63 ஹெக்டேர் நிலத்தில் அமைந்துள்ள இந்த ஓடுதளம் 1998-ம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது. அதன் பின்னர் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

தமிழ்நாடு முதல்வரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க 50 வகையான தனித் திறன் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் விமானம் ஓட்டுவதற்கான பயிற்சி மையம் அமைக்கும் திட்டமும் ஒன்று. இந்தியாவிலேயே விமான பயிற்சிக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஆனால், இங்கு விமான பயிற்சி நிலையம் இல்லை. இந்தக் குறையை போக்குவதற்கும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கும், விமானி பயிற்சிக்கான மையம் அமைப்பதற்கும் தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் தொழில்துறை அமைச்சர் தொடர் ஆய்வு மேற்கொண்டார். 

இதில், தூத்துக்குடி கோவில்பட்டி வட்டம் தோணுகால் ஊராட்சி பகுதியில் ஏற்கெனவே லட்சுமி ஆலை நிர்வாகத்தினர் அரசு நிலத்தை ஒப்பந்த அடிப்படையில் பெற்று விமான ஓடுதளம் அமைத்து பயன்படுத்தி வந்த இடம் தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. தனியார் ஆலை நிர்வாகத்தினர் முறைப்படி அந்த நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைத்து விட்டதால், அதில் விமான பயிற்சி மையம் அமைக்க ஏதுவாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கருத்துரை சமர்ப்பித்தார். 

Kovilpatti: சர்வதேச விமான பயிற்சி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரிய டிட்கோ - மகிழ்ச்சியில் கோவில்பட்டி பொதுமக்கள்

மேலும், பயிற்சி மையம் அமைக்க தேவையான சுமார் 35 ஏக்கர் நிலம் உள்ளது. அதனால் நிலம் கையகப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் விமான நிலையங்கள் அருகேயே இருப்பதால் விமான பயிற்சிக்கு ஏதுவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழக திட்ட இயக்குநர் பி.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான தொழில்நுட்ப வல்லுநர்கள் கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலை அடிவாரத்தில் உள்ள விமான ஓடுதள பாதையை ஆய்வு செய்தனர். இந்த ஓடுதளம் கடந்த 20 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் உள்ள நிலையில், அடிப்படையான பழுதுபார்த்தல் மூலம் இந்த ஓடுதளத்தை பயன்படுத்த முடியும். இதனை சீரமைப்பதன் மூலம் 10-க்கும் மேற்பட்ட பயிற்சி விமானங்களை கையாள முடியும் என்பதை கண்டறிந்தனர். இந்நிலையில், விமானி பயிற்சி மையத்தை செயல்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை டிட்கோ நிறுவனம் கோரியுள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டமாக உருவெடுக்க காத்திருக்கும் கோவில்பட்டி வளர்ச்சியின் அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் என பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Kovilpatti: சர்வதேச விமான பயிற்சி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கோரிய டிட்கோ - மகிழ்ச்சியில் கோவில்பட்டி பொதுமக்கள்

இதுகுறித்து முன்னாள் ராணுவவீரர் ஜெயபிரகாஷ் நாராயணசாமி கூறும்போது, "கோவில்பட்டி அருகே தோணுகால் ஊராட்சி மொட்டை மலை அடிவாரம் விமான பயிற்சிக்கு மிகவும் உகந்த இடம் என அறியப்பட்டுள்ளது. இந்த ஓடுதளத்துக்கு VO26 என்ற ஜிபிஎஸ் குறியீடு தற்போது உள்ளது. இங்கு சர்வதேச விமான பயிற்சி நிலையம் அமைய உள்ளது வரவேற்கத்தக்கது. இந்தியாவில் ஆண்டுதோறும் 1500 விமான ஓட்டிகள் தேவைப்படுகின்றனர். ஆனால் 600 பேர் தான் இந்தியாவில் இருந்து வருகின்றனர். மற்ற அனைவரும் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தான். இப்பகுதியில் விமான பயிற்சி மையம் அமையப்பெற்றால் தமிழகம் மட்டும் இன்றி இந்தியா முழுவதிலும் இருந்து விமான பயிற்சி பெற மாணவர்கள் வருவார்கள். அவர்களுக்கு குறைந்தது 18 மாதங்கள் வரை பயிற்சி வழங்கப்படும். இதனால் இப்பகுதியில் பொருளாதாரம் மேம்படும். இந்த விமான பயிற்சி மையத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தமிழக மாணவர்களின் விமான பைலட் கனவு நினைவாகும். மேலும், விமான பயிற்சி தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும்" என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay : ”2026-ல் விஜய் முதலமைச்சர்! என்.டி.ஆர் பாணியில் வெற்றி” வெளியான மெகா சர்வே!Trichy Suriya on Annamalai | Bussy Anand | Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
One Nation One Election: வரப்போகும் மாற்றம்; மாநிலங்கள் என்னவாகும்? ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல்!
Chembarambakkam Lake: 6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
6 மணி நேரம்.. 5 மடங்கு உயர்வு.. ஆலோசனையில் அதிகாரிகள்..‌ செம்பரம்பாக்கம் நிலை என்ன ?
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
Naan Mudhalvan scheme: நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 1 லட்சம் பேருக்குப் பணி: அமைச்சர் கோவி செழியன் பெருமிதம்!
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
சாய் பல்லவியவே கோபப்பட வச்சீட்டாங்களே...சைவத்திற்கு மாறினாரா சாய் பல்லவி ?
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
Teachers Leave: இனி அனைத்து ஆசிரியர்களும் அனுமதி பெற்றுத்தான் விடுப்பு எடுக்க வேண்டுமா? சுற்றறிக்கையால் சர்ச்சை!
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
இது சமத்துவ கொள்கை மட்டுமல்ல; ஆட்சியின் கொள்கை: பெரியார் விழாவில் ஸ்டாலின் முழங்கியது என்ன?
Minister Senthil Balaji: அண்ணாமலை குறித்து கேள்வி...
அண்ணாமலை குறித்து கேள்வி... "சிலருக்கு ஊரில் வேலை வெட்டி இல்லை" கடுப்பான செந்தில் பாலாஜி
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Dhanusu New Year Rasi Palan: தனுசுக்கு ஜெயமே! 2025ல் நினைத்தது எல்லாம் நடக்கப்போகுது - ஆண்டு ராசிபலன்
Embed widget