8 நாட்களுக்கு முன் குளச்சல் துறைமுகத்தில் கடத்தப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு
மதுரை வீரனின் வீட்டை செல்லையா தீயிட்டு கொழுத்தியது சம்பந்தமாக முன் விரோதம் இருந்தது போலீஸ் விசாரணையில் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்லையா 22-வயதான இவர் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் சுமடு எடுக்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 8 ஆம் தேதி வேலை முடிந்த அவர் மீன்பிடி துறைமுகத்தில் தூங்கி கொண்டிருந்த போது இரவு வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் செல்லையாவை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.கடத்தல் குறித்து செல்லையாவின் தாயார் நாச்சியார் குளச்சல் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் 2 தனிப்படை அமைத்து செல்லையாவை தேடி வந்தனர்.இந்த நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் செல்லையாவின் நண்பர் மயிலாடி பகுதியை சேர்ந்த மதுரைவீரன் என்பவரை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் மதுரை வீரனின் வீட்டை செல்லையா தீயிட்டு கொழுத்தியது சம்பந்தமாக முன் விரோதம் இருந்த நிலையில் மதுரை வீரன் அவரது மனைவி பார்வதி மற்றும் நண்பர்கள் சந்தோஷ், ஐயப்பன், சாத்தையன் ஆகியோருடன் டாட்டா ஏஸ் வாகனத்தில் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்று அங்கு தூங்கி கொண்டிருந்த செல்லையாவை கடத்தி சென்றதாகவும் அவரை 9 ஆம் தேதி அதிகாலை மணக்குடி உப்பளம் பகுதிக்கு கொண்டு சென்று அரிவாளால் வெட்டியும் கடப்பாறை கம்பிகளால் தாக்கியும் கொலை செய்து உப்பளத்தில் வீசியதாகவும் கூறிய நிலையில் மதுரை வீரனை கைது செய்த போலீசார் செல்லையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அரிவாள் கடப்பாறை உள்ளிட்ட ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததோடு கொலைக்கு உடந்தையாக இருந்த பெண் உட்பட மேலும் நான்கு பேரை தேடி வருகின்றனர்.