மேலும் அறிய

நெய்தல் கலை விழா வெற்றிக்கு தூத்துக்குடி மக்களே காரணம் - கனிமொழி எம்பி

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருந்தன. இந்த ஆண்டு நகருக்கு வெளியே நடத்தப்பட்டதால் தான் மக்கள் கூட்டம் அதிகம் வரவில்லை.

தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி முன்னெடுப்பில், மாவட்ட நிர்வாகம் மற்றும் ஸ்பிக்- கிரீன் ஸ்டார் நிறுவனம் சார்பில் இரண்டாம் ஆண்டாக நெய்தல்-தூத்துக்குடி கலைவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தூத்துக்குடி- எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியில் கடந்த 28-ம் தேதி இக்கலை விழா தொடங்கியது. கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வந்த 4-வது புத்தகத் திருவிழாவுடன் சேர்த்து நெய்தல் கலைவிழாவும் நடத்தப்பட்டது.

நெய்தல் கலை விழா வெற்றிக்கு தூத்துக்குடி மக்களே காரணம் - கனிமொழி எம்பி

தமிழர்களின் பண்பாடு, கலை, கலாச்சாரம், நாகரீகத்தை பறைசாற்றும் வகையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கிராமிய கலைஞர்கள் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். நாதஸ்வரம், தவில், நையாண்டி மேளம், ஜிம்பளா மேளம், கும்மியாட்டம், கோலாட்டம், பறையாட்டம், மயிலாட்டம், காவடியாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், ஜிம்காட்டம், சிலம்பாட்டம், களியலாட்டம், களறி, பெரும் சலங்கையாட்டம், பெரும் முரசாட்டம், துடும்பாட்டம் போன்ற 40-க்கும் மேற்பட்ட கிராமிய கலைநிகழ்ச்சிகளை 400-க்கும் மேற்பட்ட கிராமிய கலைஞர்கள் செய்து காட்டினர்.

நெய்தல் கலை விழா வெற்றிக்கு தூத்துக்குடி மக்களே காரணம் - கனிமொழி எம்பி

கலைநிகழ்ச்சிகள் மட்டுமின்றி பாரம்பரிய உணவு அரங்குகள், மகளிர் குழுவினர் மற்றும் கைவினை கலைஞர்களின் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்வதற்கான அரங்குகளு அமைக்கப்பட்டிருந்தன. இவைகளை மக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டதுடன், பொருட்களை வாங்கிச் சென்றனர். நான்கு நாட்களும் தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளை மக்களோடு மக்களாக அமர்ந்து முழுமையாக பார்வையிட்டதோடு, கலைஞர்களை ஊக்கப்படுத்தினர். 

நெய்தல் கலை விழா வெற்றிக்கு தூத்துக்குடி மக்களே காரணம் - கனிமொழி எம்பி

புத்தக திருவிழா மற்றும் நெய்தல் கலை விழாவின் இறுதி நாளை முன்னிட்டு இரவில் தூத்துக்குடி இசைக் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, சுப்பையா கலைக்குழுவினரின் ஜிம்பளா மேளம், சமர் கலைக்குழுவினரின் பறையாட்டம், திருவாரூர் எஸ்.எஹ்.சுஜித் கலைக்குழுவினரின் பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகள், காரமடை கலைக்குழுவினரின் துடும்பாட்டம் மற்றும் வி.எம்.மெல்லிசைக் குழுவினரின் மெல்லிசை நிகழச்சி ஆகியவை நடைபெற்றன. கடைசி 2 நாட்களும் விடுமுறை தினங்கள் என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

நெய்தல் கலை விழா வெற்றிக்கு தூத்துக்குடி மக்களே காரணம் - கனிமொழி எம்பி

தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து கனிமொழி எம்பி பேசும்போது,நெய்தல் கலை விழா சிறப்பாக நடைபெற முதல் காரணம் தூத்துக்குடி மக்கள் தான். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்த கலைஞர்களுக்கு நன்றிகள். நெய்தல் விழா சிறப்பாக அமைய உறுதுணையாக இருந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தூத்துக்குடி மேயர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், எஸ்பி உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள், ஸ்பிக் நிறுவன அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தொடர்ந்து எம்எல்ஏக்கள், மேயர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு எம்பி சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

நெய்தல் கலை விழா வெற்றிக்கு தூத்துக்குடி மக்களே காரணம் - கனிமொழி எம்பி

கடந்த 11 நாட்களாக நடைபெற்ற 4-வது தூத்துக்குடி புத்தகத் திருவிழாவும் நிறைவடைந்தது. இந்த புத்தகத் திருவிழாவில் 110 பதிப்பாளர்கள் அரங்குகளை அமைத்திருந்தனர். மேலும், அரசு துறைகள் சார்பில் 10 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தினமும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேச்சாளர்கள் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினர். கடைசி 4 நாட்களும் நெய்தல் கலைவிழா நடைபெற்றதால் இந்த நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. தினமும் மாலையில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நெய்தல் கலை விழா வெற்றிக்கு தூத்துக்குடி மக்களே காரணம் - கனிமொழி எம்பி

புத்தகத் திருவிழா இந்த ஆண்டு தூத்துக்குடி நகருக்கு வெளியே நடைபெற்றதால் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. பெரும்பாலான நாட்களில் புத்தக அரங்குகள் வெறிச்சோடி காணப்பட்டன. புத்தகங்கள் விற்பனையும் மிகவும் குறைவாகவே இருந்ததாக பதிப்பாளர்கள் தெரிவித்தனர். 11 நாட்களிலும் சேர்த்து அரங்குகளில் சுமார் ரூ.40 லட்சம் அளவுக்கே புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தக திருவிழாவில் சுமார் ரூ.1 கோடி அளவுக்கு புத்தகங்கள் விற்பனையாகியிருந்தன. இந்த ஆண்டு நகருக்கு வெளியே நடத்தப்பட்டதால் தான் மக்கள் கூட்டம் அதிகம் வரவில்லை. எனவே, வரும் ஆண்டுகளில் புத்தகத் திருவிழாவை நகருக்குள் நடத்த வேண்டும் என புத்தக பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget